கிராண்ட்மாஸ்டர் அலெஜான்ட்ரோ ராமிரெஸ், செயின்ட் லூயிஸ் செஸ் கிளப்பில் இருந்து ராஜினாமா செய்த சில நாட்களுக்குப் பிறகு, எட்டு செஸ் வீராங்கனைகள் அவர் பாலியல் துன்புறுத்தல் தந்ததாக குற்றம் சாட்டியுள்ளது செஸ் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சூசன் போல்கர் ட்வீட்


கிராண்ட்மாஸ்டர் சூசன் போல்கர் ட்விட்டரில் இந்த பாலியல் முறைகேடுகளை வெளிப்படுத்தினார். ஒரு ட்விட்டர் பதிவில், கடந்த 50 ஆண்டுகளில் "பாலியல் துன்புறுத்தல் / தாக்குதல் / துஷ்பிரயோகம் பற்றி பெண் சதுரங்க வீரர்களால் பகிர்ந்து கொள்ளப்பட்ட எண்ணற்ற கொடூரமான கதைகளை" தான் கேள்விப்பட்டதாகவும், மேலும் தானும் பலமுறை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும் கூறியுள்ளார். முக்கியமான இடத்தில் இருந்தவர்கள் இது குறித்து வெளிப்படையாக பேசுவதை அச்சுறுத்தினர் என்றும் கூறியுள்ளார்.






வெளியில் சொல்பவர்களே பாதிக்கப்படுகிறோம்


"எவ்வளவு முறை இந்த சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளன என்பதை தாண்டி, இதை செய்த உறுப்பினர்கள் பாதுகாக்கப்பட்டனர்... அவர்கள் செய்ததற்காக எங்களை குற்றம் சாட்டுகின்றனர். இந்த விலங்குகளை ஒழிக்க நாம் ஏதாவது செய்திருக்க வேண்டும். புகாரளிக்க 'அதிக நேரம்' தமதித்ததற்காக இதுவரை பலர் தண்டிக்கப்பட்டுள்ளோம். விளம்பரத்திற்காக/பணத்திற்காக இதனை சொல்கிறோம் என்று எண்ணற்றவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் இதுவரை எந்த கொடூரருக்காவது செஸ் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதா?” என்று அவர் வியாழக்கிழமை ட்வீட் செய்தார்.


தொடர்புடைய செய்திகள்: Shubman Gill Six: வாவ்... சுப்மன்கில் சிக்ஸால் பந்தே காணாம போச்சு..! கஷ்டப்பட்டு தேடிக் கண்டுபிடித்த ரசிகர்..!


வாழ்நாள் தடைக்கு கூட வாய்ப்புள்ளது


அவர் மேலும், “பாதிக்கப்பட்டவர்கள் இதனை வெளியில் பேசினால், அவர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது, வாழ்நாள் முழுவதும் செஸ் விளையாட்டில் இருந்து தடை செய்யும் சூழல் கூட ஏற்படும். பெண் வீரர்கள் / பயிற்சியாளர்கள் / நடுவர்கள் / அமைப்பாளர்கள் / தன்னார்வலர்களை துன்புறுத்திய வரலாற்றைக் கொண்ட பல பிரபல ஆண் செஸ் வீரர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்", என்று ட்வீட்டில் எழுதி இருந்தார்.






வருங்கால வீராங்கனைகளுக்கான போர் இது


அவர் மேலும், “இனி இதற்காக எங்களுக்கு என்ன பாதிப்பு வந்தாலும் பரவாயில்லை, வருங்கால வீராங்கனைகளை பாதுகாக்க இந்த மகத்தான போரை நாம் தொடர்ந்து நடத்த வேண்டும். தைரியமாகப் பேசியவர்களை ஒரு பக்கம் எவ்வளவுதான் அவமதிக்கவோ, அவதூறாகப் பேசவோ முயன்றாலும் தயவு செய்து எங்களுக்கு ஆதரவு கொடுங்கள்", என்று எழுதினார். தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்ட ஒரு கட்டுரையில் இதுவரை, குறைந்தது எட்டு பெண் செஸ் வீரர்கள் கிராண்ட்மாஸ்டர் ராமிரெஸ்-ஆல் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக குற்றம் சாட்டியுள்ளனர். ராமிரெஸ் மீதான குற்றச்சாட்டுகள் முதலில் பொது களத்தில் வெளிவந்தது, WGM ஜெனிபர் ஷஹாடே அவரைக் குற்றம் சாட்டி ஒரு ட்வீட்டைப் பதிவு செய்தபோதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.