இரட்டை வெண்கலப் பதக்க நாயகியை தோளில் தூக்கி வைத்து கொண்டாட்டம்! டெல்லியில் அமோக வரவேற்பு - வீடியோ

மேலும் பாக்கரின் பெற்றோர்கள், உறவினர்கள், குழந்தைப் பருவ பயிற்சியாளர் என அனைவரும் அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர். 

Continues below advertisement

2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இரட்டை வெண்கலப் பதக்கம் வென்ற பதக்க நாயகி டெல்லி வந்தடைந்தார். அவருக்கு மாலை மரியாதையுடன் மேள தாளங்கள் வாசித்து அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது. 

Continues below advertisement

பாரீஸ் ஒலிம்பிக் 2024ல் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த மனு பாக்கருக்கு டெல்லி விமான நிலையத்தில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பாரீஸ் ஒலிம்பிக் 2024ல் இந்தியாவின் இரட்டை வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கர், ஆகஸ்ட் 7 (புதன்கிழமை) டெல்லியில் தரையிறங்கினார். புது டில்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இந்திய துப்பாக்கி சுடும் வீராங்கணை மனு பாக்கருக்கு விமான நிலைய ஊழியர்கள், ஊடகங்கள் மற்றும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

மேலும் பாக்கரின் பெற்றோர்கள், உறவினர்கள், குழந்தைப் பருவ பயிற்சியாளர் என அனைவரும் அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர். 

பெண்களுக்கான 10 மீட்டர் துப்பாக்கிச்சுடும் போட்டியில் பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்றார். மேலும் அவர் சரப்ஜோத் சிங்குடன் இணைந்து கலப்பு அணி பிரிவில் 10மீட்டர் துப்பாக்கிச்சுடும் போட்டியில் மேலும் ஒரு வெண்கலப்பதக்கம் வென்றார். 

தொடர்ந்து 22 வயதான அவர் பெண்களுக்கான 25 மீ ஏர் பிஸ்டல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார், ஆனால் நான்காவது இடத்தைப் பிடித்தார்.

 

Continues below advertisement