சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் கூட்டம் ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இந்தாண்டிற்கான கூட்டம் பெய்ஜிங்கில் நடைபெற்றது. ஒலிம்பிக் கமிட்டியின் 139ஆவது கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் இந்தியா சார்பில் அபினவ் பிந்த்ரா, நீதா அம்பானி, இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் நரேந்திர பாட்ரா மற்றும் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் ஆகியோர் பங்கேற்றனர். 


 


இந்தக் கூட்டத்தில் அடுத்தாண்டிற்கான ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தை எந்த நாடு நடத்துவது என்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் அடுத்த ஆண்டு கூட்டத்தை நடத்த மும்பை தேர்வு செய்யப்பட்டது. மும்பை நகரத்திற்கு மொத்தம் இருந்த 82 வாக்குகளில் 75 பேர் ஆதரவாக வாக்களித்தனர். ஒரு வாக்கு மட்டும் எதிராக வந்தது. மற்ற 6 பேர் வாக்களிக்கவில்லை. இதனால் அடுத்த ஆண்டு ஒலிம்பிக் கமிட்டியின் கூட்டத்தை நடத்த மும்பை தேர்வாகியுள்ளது. 


 






இதன்மூலம் 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் ஒலிம்பிக் கமிட்டியின் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கு முன்பாக 1983ஆம் ஆண்டு டெல்லியில் ஒலிம்பிக் கமிட்டியின் கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக அடுத்த ஆண்டு இந்தியாவில் ஒலிம்பிக் கமிட்டி கூட்டம் நடைபெற உள்ளது. 


 






மும்பை நகரம் ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தை தேர்வாகியதை தொடர்ந்து பலரும் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இவர் தவிர ஹீமா தாஸ் உள்ளிட்ட விளையாட்டு வீரர் வீராங்கனைகளும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண


மேலும் படிக்க: கடைசி டி20 போட்டிக்கு ‘நோ சொன்ன 2 வீரர்கள்’ - வீடு திரும்பிய கோலி.. இன்னொரு வீரர் யார் தெரியுமா?