ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் கிரிக்கெட் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை இந்திய அணி வெற்றி பெற்ற சூழலில், முதல் இரண்டு டி20 போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், இந்த தொடருக்கு பிறகு இந்திய அணி இலங்கை அணியுடன் டி20, டெஸ்ட் தொடர்களில் ஆட உள்ளது. 


லக்னோவில் பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கும் டி20 தொடரில் இருந்து விராட் கோலி, பண்ட் ஆகியோருக்கு பயோ-பபிள் கட்டுப்பாடுகளில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியதால் விராட் கோலி வீடு திரும்பியுள்ளார் என பிசிசிஐ வட்டாரம் தகவல் தெரிவித்திருக்கிறது. இதனால், வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான கடைசி டி20 போட்டியில், இலங்கை அணியுடனான டி20 தொடரிலும் அவர் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு வீரரான ரிஷப் பண்ட்க்கும் கடைசி டி20 போட்டி, இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 










முன்னதாக, கடந்தாண்டு இந்திய அணியின் டி20 கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்தார். பின்னர் அணி நிர்வாகம் அவரை ஒருநாள் போட்டியின் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியது. டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும் கேப்டனாக தொடர்ந்த கோலி கடந்த மாதம் தென்னாப்பிரிக்க தொடருக்கு பிறகு, தனது டெஸ்ட் கேப்டன்சியையும் ராஜினாமா செய்தார். இதன் காரணமாக, அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் புதிய கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமிக்கப்பட்டார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண