பாராலிம்பிக் 2024:


மாற்றுத்திறனாளிகளுக்கான பாரீஸ் பாராலிம்பிக் போட்டி கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த போட்டிகளில் இந்தியா சார்பில் மொத்தம் 84 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். அந்தவகையில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா ஒரு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் நான்கு வெண்கலப்பதக்கம் உட்பட மொத்தம் ஏழு பதக்கங்களை வென்றது. இச்சூழலில் தான் இன்றைய போட்டியில் அதே முனைப்புடன் இந்தியா களம் காண இருக்கிறது. அந்தவகையில் இன்று (செப்டம்பர் 2) இந்தியா விளையாட உள்ள போட்டி அட்டவணையை இந்த தொகுப்பில் பார்ப்போம்:


போட்டி அட்டவணை:


மதியம்: 12:30 - பாரா ஷூட்டிங் - பி3 - கலப்பு 25மீ பிஸ்டல் எஸ்எச்1- நிஹால் சிங், அமீர் அகமது பட்


மதியம்: 1:30 - பாரா தடகளம் - ஆடவர் வட்டு எறிதல் - F56 இறுதிப் போட்டி - யோகேஷ் கதுனியா


மதியம் 2 .40 - பாரா பேட்மிண்டன் - கலப்பு இரட்டையர் SH6 வெண்கலப் பதக்கப் போட்டி - சிவராஜன் சோலைமலை/நித்யா ஸ்ரீ சுமதி சிவன் vs சுபன்/ரினா மார்லினா (ஐஎன்ஏ)


மதியம்: 3:30- பாரா பேட்மிண்டன் - ஆண்கள் ஒற்றையர் SL3 தங்கப் பதக்கப் போட்டி - நிதேஷ் குமார் vs டேனியல் பெத்தேல் (ஜிபிஆர்)


மாலை 4:30 - பாரா ஷூட்டிங் - பி3 - கலப்பு 25மீ பிஸ்டல் எஸ்எச்1- நிஹால் சிங், அமீர் அகமது பட்


இரவு 7 மணி - பாரா பேட்மிண்டன் - மகளிர் ஒற்றையர் SU5 பதக்கப் போட்டிகள் - துளசிமதி முருகேசன் (தங்கப் பதக்கப் போட்டி), மனிஷா ராமதாஸ் (வெண்கலப் பதக்கப் போட்டி)


இரவு 8:15 - பாரா ஷூட்டிங் - பி3 - கலப்பு 25மீ பிஸ்டல் எஸ்எச்1 இறுதிப் போட்டி - நிஹால் சிங், அமீர் அகமது பட் (தகுதி பெற்றால்)


இரவு 8: 40 - பாரா வில்வித்தை - கலப்பு அணி கூட்டு திறந்த காலிறுதி - ஷீத்தல் தேவி/ராகேஷ் குமார்


இரவு 9:40 முதல் - பாரா வில்வித்தை - கலப்பு அணி கூட்டு திறந்த அரையிறுதி - ஷீத்தல் தேவி/ராகேஷ் குமார் (தகுதி பெற்றால்)


இரவு 9:40 - பாரா பேட்மிண்டன் - ஆண்கள் ஒற்றையர் SL4 தங்கப் பதக்கப் போட்டி - சுஹாஸ் யதிராஜ் vs லூகாஸ் மஸூர் (FRA)


இரவு 9:40 - பாரா பேட்மிண்டன் - ஆண்கள் ஒற்றையர் SL4 வெண்கலப் பதக்கப் போட்டி - சுகந்த் கடம் vs ஃப்ரெடி செட்டியவான் (ஐஎன்ஏ)


- பாரா பேட்மிண்டன் - பெண்கள் ஒற்றையர் SH6 வெண்கலப் பதக்கப் போட்டி - நித்யா ஸ்ரீ சிவன் vs மார்லினா ரினா (ஐஎன்ஏ)


இரவு 10:30 - பாரா தடகளம் - ஆண்களுக்கான ஈட்டி எறிதல் - F64 இறுதிப் போட்டி - சுமித் ஆன்டில், சந்தீப் சஞ்சய் சர்கார், சந்தீப்


இரவு 10:34 - பாரா தடகளம் - பெண்களுக்கான வட்டு எறிதல் - F53 இறுதிப் போட்டி - காஞ்சன் லக்கானி


இரவு 10:35 முதல் - பாரா வில்வித்தை - கலப்பு அணி கூட்டு திறந்த பதக்க சுற்றுகள் - ஷீத்தல் தேவி/ராகேஷ் குமார் (தகுதி பெற்றால்)


இரவு 11:50 - பாரா தடகளம் - பெண்கள் 400 மீ - டி20 சுற்று 1 - தீப்தி ஜீவன்ஜி