பாரீஸ் ஒலிம்பிக் 2024:
பாரீஸ் ஒலிம்பிக்கில் 3 வது நாள் ஆட்டம் இன்று(ஜூலை 29)விறுவிறுப்ப்டன் நடைபெற்று வருகிறது. இதில் 10 மீட்டர் ரைபிள் துப்பாக்கிச்சுடுதல் போட்டி நடைபெற்றது. அந்தவகையில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அர்ஜூன் பபுதா இன்றைய போட்டியில் தங்கப்பதக்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அவர் இன்றைய போட்டியில் ஏமாற்றம் அளித்தார்.
இந்தியா - அர்ஜென்டினா ஆட்டம்:
இதனைத்தொடர்ந்து இந்தியா மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோதிய ஹாக்கி போட்டி நடைபெற்றது. இந்த போட்டி சம நிலையில் முடிந்தது. ஒரு கோல் அடித்து ஆரம்பத்தில் அர்ஜென்டினா அணி முன்னிலையில் இருந்தது.
கடைசி நிமிடத்தில் இந்திய அணி கோல் அடித்து போட்டியை சமன் செய்தது. ஆட்டம் முடிய ஒரு நிமிடம் மட்டுமே இருந்த நிலையில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஒரு கோல் அடித்தார். இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் கடைசி நிமிடத்தில் அடித்த இந்த கோல் மூலம் இந்திய அணி டிரா செய்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Lakshya sen: இந்தியர்கள் அதிர்ச்சி..! ஒலிம்பிக்கில் நடந்த மோசம்? பேட்மிண்டன் வீரர் லக்க்ஷயா சென்னின் வெற்றியை நீக்கி அறிவிப்பு
மேலும் படிக்க:Paris 2024 Olympics: ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்பவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு பரிசு..! பெட்டியில் இருப்பது என்ன தெரியுமா?