மூன்று முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற முன்னாள் உலக சாம்பியன் டோரி போவி இளம் வயதில் அதிர்ச்சி மரணம் அடைந்துள்ளார். இவரின் திடீர் இறப்பு விளையாட்டு உலகில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு வயது 32. அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள டோரியின் வீட்டில் இறந்த நிலையில் அவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.


ஒலிம்பிக்கில் மூன்று முறை பதக்கம்:


இவரின் இறப்புக்கு காரணம் என்ன என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. அமெரிக்க நாட்டை சேர்ந்த டோரி, மூன்று ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் 4x100மீ தொடர் ஓட்டத்தில் அமெரிக்க அணி தங்க பதக்கம் வென்றது. அந்த அணியில் டோரி இடம்பெற்றார். இதுவே, இவரின் முதல் ஒலிம்பிக் தங்க பதக்கமாகும்.


2017ஆம் ஆண்டு, லண்டனில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியிலும் தங்கம் வென்று கலக்கினார் டோரி. பரபரப்பாக நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் ஐவரி கோஸ்ட் நாட்டின் மேரி-ஜோசி தா லூவை தோற்கடித்தார்.


கடந்த 2016ஆம் ரியோ ஒலிம்பிக்கில் 100 மீ ஓட்டப்பந்தய போட்டியில் வெள்ளியும் 200 மீ ஓட்டப்பந்தய போட்டியில் வெண்கலமும் வென்றார்.


மிசிசிப்பியில் பிறந்து வளர்ந்த டோரி, தொடக்க காலத்தில் கூடைப்பந்து வீராங்கனையாக இருந்தார். பின்னர், ஓட்டப்பந்தயத்தில் அவரின் திறமை வெளிப்பட, மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டு 100 மீ, 200 மீ மற்றும் நீளம் தாண்டுதல் ஆகியவற்றில் பதக்கங்களை வென்றார்.


முன்னாள் உலக சாம்பியன்:


தெற்கு மிசிசிப்பி பல்கலைக்கழகத்தில் தடகள உதவித்தொகையை வென்ற பிறகு அவர் கல்லூரியில் அதிக வெற்றியை பெற தொடங்கினார். 2011ஆம் ஆண்டு, உட்புற மற்றும் வெளிப்புற நீளம் தாண்டுதல் ஆகியவற்றில் தேசிய அளவிலான போட்டியில் பதக்கங்களை வென்றார். 


கடந்த 2014இல் ஸ்பிரிண்டிங்கில் கவனம் செலுத்தும்படி அவரது வேகம் அனைவரையும் வியக்க வைத்தது. எனவே, அதன் பிறகு ஸ்பிரிண்டிங்கில் கவனம் செலுத்த தொடங்கினார்.


கடந்த 2019இல் மீண்டும் நீளம் தாண்டுதலுக்குத் திரும்பினார்.ய உலக சாம்பியன்ஷிப்பில் நான்காவது இடத்தைப் பிடித்தார். கடந்த 2021ஆம் ஆண்டு, டோக்கியோ ஒலிம்பிக்கில் அமெரிக்க அணிக்கு தகுதி பெற அவர் முயற்சி செய்யவில்லை.


சக விளையாட்டு வீரர்களுடன் பணிவுடன் நடந்து கொள்வார் என பல விளையாட்டு வீரர்கள் அவரை பற்றி கூறியிருக்கினர். 100க்கும் குறைவான மக்களை தொகை கொண்ட சாண்ட் ஹில் நகரில் அவரது பாட்டியால் வளர்க்கப்பட்டார். ஆனால், அவரது திறமை அவரை உலக அரங்கிற்கு உயர்த்தியது.