பாரீஸ் ஒலிம்பிக் 2024:


கடந்த ஒரு மாதமாகவே ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் பாரீஸ் ஒலிம்பிக் தொடருக்காக காத்திருந்தனர். முன் எப்போதும் இல்லாத அளவில் இந்த முறை ஒலிம்பிக் தொடரில் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அதிகம் பங்கேற்றுள்ளனர். அதாவது வீராங்கனைகள் 5,250 பேர், வீரர்கள் 5,250 இந்த முறை ஒலிம்பிக்கில் விளையாட உள்ளனர். 


பிரமாண்டமாக தொடங்கியது:


போட்டிகளை காண லட்சக்கனக்கான ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை நடைபெற்ற ஒலிம்பிக் தொடர்களில் நிகழ்ச்சிகள்எல்லாம் மைதானங்களில் தான் தொடங்கியது. ஆனால் பிரன்ஸில் இன்று தொடங்கிய பாரீஸ் ஒலிம்பிக் தொடர் அங்குள்ள பிரபல நதிகளில் ஒன்றான சென் நதிக்கரையில் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் ஒலிம்பிக்கில் பங்கேற்ற நாடுகளின் அணிகள் கப்பல்கள் மற்றும் படகுகளில் சென் நதிக்கரையை அலங்கரித்தது குறிப்பிடத்தக்கது.


இந்தியா சார்பில் 117 வீரர்கள்:


இந்த ஆண்டு துப்பாக்கி சுடுதல், டென்னிஸ், ஈட்டி எறிதல், மல்யுத்தம், பேட்மிண்டன், வில்வித்தை, ஹாக்கி, தடகளம் என 16 போட்டிகளில் இந்தியா சார்பில் 117 வீரர்கள் களம் காண்கின்றனர்.கடந்த 2021ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 7 பதக்கங்களை வென்றிருந்தது. இந்த போட்டியில் இரட்டை இலக்கத்தில் பதக்கங்களை வெல்ல தயாராகி உள்ளது கவனிக்கத்தக்கது.