உலகில் நடைபெறும் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்று ஒலிம்பிக் திருவிழா. ஒலிம்பிக் திருவிழா இன்று பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் தொடங்குகிறது. பாரிஸ் ஒலிம்பிக் திருவிழாவை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள ஒலிம்பிக் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.


ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் எத்தனை ஆண்கள், பெண்கள் பங்கேற்பு?


நடப்பு ஒலிம்பிக்கில் 206 நாடுகள் பங்கேற்கின்றன. இந்தியா சார்பில் மொத்தம் 117 பேர் பங்கேற்கின்றனர். இதில் ஆண்கள் மொத்தம் 70 பேர் மற்றும் பெண்கள் 47 பேர் ஆவார்கள்.


எத்தனை போட்டிகளில் இந்தியா பங்கேற்பு?


இந்த ஒலிம்பிக் தொடரில் இந்தியா மொத்தம் 16 விளையாட்டுகளில் இந்தியர்கள் பங்கேற்கின்றனர். வில்வித்தை, தடகளம், பேட்மிண்டன், குத்துச்சண்டை, குதிரையேற்றம், கோல்ஃப், ஹாக்கி, ஜூடோ, படகுப்போட்டி, துப்பாக்கிச்சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், மல்யுத்தம் மற்றும் பளுதூக்குதல் இந்த போட்டிகள் ஆகும்,


எந்த போட்டியில் அதிக இந்தியர்கள் பங்கேற்பு?


இந்தியா அதிகளவு பதக்கம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படும் தடகளப் போட்டியில் 29 பேர் பங்கேற்கின்றனர். இதில் ஈட்டி எறிதலில் இந்தியா தங்கம் வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக இந்தியொ சார்பில் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் 21 பேர் பங்கேற்கின்றனர்.


எத்தனை இந்தியர்கள் அறிமுகம்?


இந்த ஒலிம்பிக் தொடரில் மொத்தம் 117 பேர் பங்கேற்கின்றனர். இவர்களில் 72 இந்தியர்களுக்கு இது முதல் ஒலிம்பிக் தொடர் ஆகும்.


அனுபவசாலிகள் யார்?


இந்த ஒலிம்பிக் தொடரைப் பொறுத்தவரை மிக நீண்ட அனுபவம் வாய்ந்த ஒலிம்பிக் வீரராக தமிழ்நாட்டைச் சேர்ந்த சரத்கமல் உள்ளார். மிக நீண்ட அனுபவம் கொண்ட சரத்கமல் பங்கேற்கும் 5வது ஒலிம்பிக் தொடர் இதுவாகும். சரத்கமல் மட்டுமின்றி லியோண்டர் பயசும் அனுபவசாலியாக களமிறங்குகிறார். ரோகண் போபண்ணா, பி.வி.சிந்து, மணிகா பத்ரா, மிராபாய் சானு ஆகியோருக்கு மூன்றாவது ஒலிம்பிக் தொடர் ஆகும்.


வயதான மற்றும் மிக இளம் வீரர் யார்?


நடப்பு ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்தியர்களில் மிகவும் வயதானவராக ரோகன் போபண்ணா உள்ளார். அவருக்கு 44 வயதாகிறது. டோக்கியோ ஒலிம்பிக்கில் அவரால் பங்கேற்க இயலவில்லை. இந்த ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பங்கேற்கும் மிக இளவயது நபர் என்ற பெருமையை நீச்சல் வீராங்கனை தினிதி தேசிங்கு பெற்றுள்ளார். அவருக்கு 14 வயது மட்டுமே ஆகிறது.


பல முறை பதக்கங்கள் வென்றவர் யார்?


நார்மன் ப்ரிட்சர்ட், சுஷில்குமார் மற்றும் பி.வி.சிந்து ஆகியோர் மட்டுமே ஒலிம்பிக்கில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை பதக்கம் வென்றவர்கள் ஆவார்கள்.


நம்பிக்கை நட்சத்திரம் யார்? யார்?


இந்தியாவின் தங்க வேட்டையில் மிகப்பெரிய நட்சத்திரமாக இருப்பவர் நீரஜ் சோப்ரா. இவர் மட்டுமின்றி பேட்மிண்டனில் சத்விக்சாய்ராஜ், சிரக்‌ஷெட்டி, பேட்மிண்டனில் பி.வி.சிந்து, வில்வித்தையில் இந்திய மகளிர் அணி, இந்திய ஆடவர் அணி, இந்திய ஆண்கள் ஹாக்கி அணி, துப்பாக்கிச்சுடுதலில் சிப்ட் கவுர் சம்ரா, மனுபகேர், குத்துச்சண்டையில் நிகத்ஜரீன், மல்யுத்தத்தில் அன்டின் பங்கல் ஆகியோர் மிகப்பெரிய நம்பிக்கையாக உள்ளனர்.