இந்திய ஹாக்கி அணி:


ஒடிசா மாநில அரசு இந்திய ஹாக்கி அணிக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஸ்பான்சர்ஷிப் வழங்கி வருகிறது. முன்னதாக ஒடிசாவில் உள்ள புவனேஸ்வர் கலிங்கா மைதானத்தில் உலகக் கோப்பை ஹாக்கி, புரோ ஹாக்கி லீக் போட்டிகளை ஒடிசா அரசு வெற்றிகரமாக நடத்தியது.


இதனிடையா நவீன் பட்நாயக் தலைமையிலான முந்தைய அரசு சீனிய மற்றும் ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் தேசிய ஹாக்கி அணியின் ஸ்பான்சர்ஷிப்பை 2023 ஆம் ஆண்டு வரை தங்களது ஆட்சியின் போது நீட்டித்திருந்தது. இந்நிலையில் தான் புதிதாக பொறுபேற்றிருக்கும் மோகன் சரண் மாஜி தலைமையிலான அரசு ஒரு புதிய முடிவை எடுத்திருக்கிறது.


ஸ்பான்சர்ஷிப் நீட்டிப்பு:


அதாவது ஒடிசா மாநில அரசு இந்திய ஹாக்கி அணியின் ஸ்பான்சர்ஷிப்பை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது. அதன்படி வரும் 2036 ஆம் ஆண்டு வரை நீட்டித்திருக்கிறது.  இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மாஜி மற்றும் விளையாட்டு, இளைஞர் சேவைகள் துறை இணையமைச்சர் சூர்யபன்ஷி சூரஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்திற்கு பிறகு ஒடிசா அரசு இந்த முடிவை எடுத்து இருக்கிறது.


தலைமைச் செயலாளர் & தலைமை வளர்ச்சி ஆணையர் பிரதீப் குமார் ஜெனா மற்றும் ஆணையர் மற்றும் செயலர் ஆர். வினீல் கிருஷ்ணா ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.






இது தொடர்பாக ஹாக்கி இந்தியா வெளியிட்டுள்ள எக்ஸ் பக்கத்தில்,”இந்திய ஹாக்கிக்கு உறுதியான ஆதரவு மற்றும் அர்ப்பணிப்புக்காக ஒடிசா அரசாங்கத்திற்கு நாங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த கூட்டாண்மை நமது நாடு முழுவதும் விளையாட்டை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும்” என்று கூறியுள்ளது. 


மேலும் படிக்க: AUS vs BAN: வங்கதேசத்தை சூப்பர் 8ல் சிதைத்த ஆஸ்திரேலியா.. 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தல்!


மேலும் படிக்க: Fact Check: விரைவில் சானியா மிர்சா - முகமது ஷமி திருமணமா..? சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்..!