மூன்று முறை சாம்பியனான நோவக் ஜோகோவிச், வரும் திங்கட்கிழமை தொடங்க இருக்கும் அமெரிக்க ஓபனில் விளையாடப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவு

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "துரதிர்ஷ்டவசமாக, இந்த முறை யுஎஸ் ஓபனுக்காக என்னால் நியூயார்க்கிற்கு பயணிக்க முடியாது. உங்களின் அன்பு மற்றும் ஆதரவுகளுக்கு நன்றி. எனது சக வீரர்களுக்கு வாழ்த்துக்கள்! நான் நல்ல நிலையில், நேர்மறையான மனநிலையுடன் மீண்டும் விளையாடும் வாய்ப்புக்காக காத்திருப்பேன். டென்னிஸ் உலகே விரைவில் சந்திப்போம்!," என்று கூறியுள்ளார்.

இரண்டாவது முறை இது

கோவிட் நெறிமுறைகள் காரணமாக தடுப்பூசி போடப்படாததால் ஜோகோவிச்சால் அமெரிக்காவிற்குச் செல்ல முடியாமல் போனது. 35 வயதான செர்பிய வீரரான இவர், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸிலும் இதே காரணத்தால் விளையாட முடியாமல் இருந்தார். தடுப்பூசி போடப்படாததால் அவர் இழக்கும் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் இதுவாகும்.

தொடர்புடைய செய்திகள்: போதை.... கருகலைப்பு...! பயில்வான் வாயில் சிக்கிய புது பபிள்கம் பிக் பாஸ் பிரபலம் ஓவியா!

போட்டி இயக்குனர் அறிக்கை

யுஎஸ் ஓபனில் ஜோகோவிச்சின் இருப்பிற்கான அப்டேட்டிற்காக காதிருந்துஜா ரசிகர்களுக்கு திடீரென இந்த செய்தி வந்தது. "நோவக் ஜோகோவிச் ஒரு சிறந்த சாம்பியன். 2022 யுஎஸ் ஓபனில் அவரால் போட்டியிட முடியாமல் போவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அவர் அமெரிக்கர் அல்லாத குடிமக்களுக்கான மத்திய அரசின் தடுப்பூசி கொள்கையால் நாட்டிற்குள் நுழைய முடியாமல் போனது. நாங்கள் 2023 யுஎஸ் ஓபனில் நோவாக்கை மீண்டும் வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறோம்" ,என்று போட்டி இயக்குனர் ஸ்டேசி அலாஸ்டர் அறிக்கையில் கூறியுள்ளார்.

இழந்த வாய்ப்பு

இதில் முரண்பாடு என்னவென்றால், 2020 மற்றும் 2021 இல் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த போதெல்லாம், ​​ஜோகோவிச் நியூயார்க்கில் விளையாட அனுமதிக்கப்பட்டார். அங்கு நடந்த ஓபன் போட்டிகளில் அவர் 2011, 2015 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் சாம்பியனாக இருந்துள்ளார். கடந்த மாதம் தான், அமெரிக்க ஓபனில் "விளையாடத் தயாராகி வருவதாக" ஜோகோவிச் கூறினார், அங்கு கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் டேனியல் மெட்வெடேவிடம் ஏற்பட்ட அதிர்ச்சிகரமான தோல்விகால் நான்கு மேஜர்களில் கிராண்ட்ஸ்லாம் ஸ்வீப் என்ற ரெக்கார்ட் ஆசை தகர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.