விநாயகரை வணங்குவதற்கு பரவலாக பயன்படுத்தப் படும் முறையான தோப்பு கரணத்தின் நன்மைகள் என்ன என்று பார்க்கலாம்.


விநாயகர் சதுர்த்தி


பொதுவாக விநாயகர் அவதரித்த அல்லது பிறந்த நாளே விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது. விநாயகருக்கு தோப்பு கரணம் போடுவது அவரை வழிபடும் முறைகளில் ஒன்றாகும். இந்த தோப்பு கரணத்தை நாம் விநாயகர் கோயில்களில் பக்தர்கள் செய்து பார்த்திருப்போம். அதிலும் விநாயகர் சதுர்த்தி அன்று பலர் வீடுகளிலேயே வழிபட்டு தோப்பு கரணம் போடுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதம் ஆவணியில் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படும் நாளே விநாயகர் சதுர்த்தி. 



இந்த வருடம் எப்போது?


இந்த ஆண்டு, வளர்பிறை சதுர்த்தி நாள் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி வருகிறது. அந்த நாளே விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படவுள்ளது. இந்த நாள் மகாசதுர்த்தி என்றும் கூறுவதுண்டு. இந்த வருடம்,  விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகரை வழிபடுவதற்கு உகந்த நேரமாக 31 ஆகஸ்ட் 2022 அன்று காலை 11.04 முதல் 31 ஆகஸ்ட் 2022, மதியம் 01.37 வரை ஆகும். வட இந்தியாவில் இந்த விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் விநாயகரின் திருவுருவம் சிலையாக வடிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் மற்றும் சடங்குகளும் நடைபெறும்.


தொடர்புடைய செய்திகள்: Liger Movie Review: மனோகரா... எம்.குமரன் S/O மகாலட்சுமி... அப்டேட் வெர்சனா லைகர்? படம் முடிந்ததும் முதல் விமர்சனம்!


தோப்பு கரணம் போடுவது எப்படி?


இந்த நாளில் விநாயகருக்கு தோப்பு கரணம் போடுவது வழக்கம். விநாயகரை வணங்கும் போது இருகைகளையும் முட்டியாகப் பிடித்து வலது கையால் வலது நெற்றி ஓரத்திலும், இடது கையால் இடது நெற்றி ஓரத்திலும் 3 முறை குட்டி அதன் பின் இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்து மூன்று முறை தோப்புக் கரணம் செய்து வழிபடுகின்றனர். இதுவே தோப்புக்கரணம் என்று கூறப்படுகிறது.




என்னென்ன நன்மைகள்?


விநாயகருக்கு தோப்புக்கரணம் போடுவதன் மூலமும், நெற்றிப் பொட்டில் குட்டிக்கொள்வதன் மூலமும் நம் உடலில் இருந்து ஒரு விதமான சக்தி தட்டி எழுப்பப்படுகிறது. நமது நாடி நரம்புகள் எல்லாம் சுறுசுறுப்படைந்து, உடலும் மனமும் உற்சாகம் அடைகிறது. இதுபோல வளரும் குழந்தைகள் தினமும் செய்துவந்தால் உடலுக்கு மிகவும் நல்லது. தோப்புகரணத்தில் காது நுனிகளில் தொடுவதன் மூலமாக, மூளையின் நினைவு செல்களின் வளர்ச்சி தூண்டப்பட்டு, நினைவாற்றல் அதிகரிக்கிறது. தோப்புக்கரணம் செய்வதால் மூளைக்கு ரத்த ஓட்டம் சீராகி மனதில் ஏற்படும் மன அழுத்தம் சீரடையும் மனச்சோர்வு நீங்குவதோடு உடலின் கை கால்களின் தசைகள் வலிமையடையும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.