Bailvan Ranganathan:  சினிமா பிரபலங்கள் குறித்து கிசுகிசுக்கள் வெளியிடுவதாக கூறி அடிக்கடி சர்ச்சையில் சிக்குபவர் பயில்வான் ரங்கநாதன். அந்த வகையில் தற்போது நடிகை ஓவியா குறித்து பேசியுள்ளார். 


சமீப காலமாக சினிமா பிரபலங்கள் குறித்து அவதூறாக பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார் பயில்வான் ரங்கநாதன். ஒரு தனி நபரை பற்றி நேரடியாகவே தனக்கு தோணியதை எல்லாம் பேசி சர்ச்சையை கிளப்பி வருகிறார். பொதுவாகவே கிசு கிசு என்றால் யாருக்குதான் பிடிக்காது. அதிலும் சினிமா கிசு கிசு என்றால் சொல்லவே வேண்டாம். தானாக ஒன்றும் சொல்லவில்லை; பத்திரிகையில் வெளியிடும் செய்திகளைத்தான் கூறுகிறேன் என்று அவர் கூறி வந்தாலும் அதில் எந்த அளவுக்கு உண்மை என்பது கேள்விக்குறியே. இது போல செய்திகளை பரப்பி வருவதால் சமீபகாலமாக மிகவும் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார் பயில்வான் ரங்கநாதன்.



இப்போ டார்கெட் நடிகை ஓவியா:


பயில்வான் ரங்கநாதனால் பாதிக்கப்பட்ட பலரும் அவரை வசைபாடினாலும் அவர் அடங்குவதாக இல்லை. அவர் மீது போலீஸில் புகார் அளித்தாலும் அதனால் எந்த ஒரு பயனும் இல்லை என சிலர் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் தற்போது பயில்வானின் நாக்கில் சிக்கியிருப்பது நடிகை ஓவியா. 


ஓவியாவின் சினிமா பயணம்:


விமல் நடித்த களவாணி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் நடிகை ஓவியா. அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். ஓவியா மிகவும் பிரபலம் அடைந்தது விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தான். பிக் பாஸ் சீசன் 1ல் போட்டியாளராக பங்கேற்று பட்டிதொட்டி எல்லாம் பிரபலமானார் நடிகை ஓவியா. 


பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரிடமும் பகையை சம்பாதித்து ஓரங்கட்டப்பட்டார் என்றே சொல்லலாம். இதற்கு இடையில் காதல் ஒன்று மலர்ந்து அதனால் கிட்ட தட்ட ஒரு பைத்தியம் போல பிக் பாஸ் வீட்டிற்குள்  இருந்தார். ஒரு சமயத்தில் தற்கொலைக்கு முயற்சி செய்து, பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். நிகழ்ச்சியை விட்டு வெளியேறினாலும் ஓவியா ஆர்மி என்று ஒன்றை உருவாக்கி ரசிகர்கள் அவரை கொண்டாடினர். திரும்பின பக்கம் எல்லாம் ஓவியா பற்றிய பேச்சு, நேர்காணல் என்று ஒரே பிஸியாக ஆனார். 


போதைக்கு அடிமையானார் ஓவியா:


பட வாய்ப்புகள் இல்லாததால் ஆண் நண்பர்களுடன் டேட்டிங், நைட் பார்ட்டி, பப் என்று சுற்றிவருவதாகவும், போதைக்கு அடிமையாகி விட்டதாகவும், அவ்வப்போது கருக்கலைப்பு செய்வதாகவும் அதனால் உடல் மெலிந்து காணப்படுகிறார் என்றும் கூறியுள்ளார் பயில்வான். மேலும் ஒரு மருத்துவரிடம் விசாரித்த போது அதிகமாக கருக்கலைப்பு மாத்திரைகள் எடுத்து கொள்வதால் உடல் இளைக்கும்; ஆனால் அது மட்டுமே காரணம் என்று சொல்லிவிட முடியாது என்றும் மருத்துவர் கூறியதாக தெரிவித்துள்ளார். இப்படி ஒரு அதிர்ச்சி வீடியோ பதிவை வெளியிட்டார் பயில்வான். இது தற்போது ஓவியா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. 




பயில்வானிடம் சிக்கியவர்களில் சிலர் :


பயில்வான் ரங்கநாதன் சர்ச்சையை கிளப்பிய லிஸ்டில் நடிகர் தனுஷ், பாடகி சுசித்ரா, சின்மயி, ரேகா நாயர், மீனா கணவர் இறப்பில் சந்தேகம் என அடுத்தடுத்து ஏதாவது ஒரு சர்ச்சையை குறிப்பாக திரை பிரபலங்களையே குறிவைத்து தாக்கி பேசி வருகிறார். யூடியூபில் இப்படி கிசு கிசு பேசி மிகவும் வைரலாகி வருகிறார் பயில்வான் ரங்கநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.