இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட்   கடந்தாண்டு  கார் விபத்தில் படுகாயமடைந்தார். அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. நட்சத்திர வீரர் விபத்தில் சிக்கியது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், ரிஷப் பண்ட் உடல்நலம் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி வருவவதாக அவரது வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது, ரிசப் பண்ட், தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் மாடி படி ஏறும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


ரிஷப் பண்ட் - கார் விபத்து


கடந்த 2022- ம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் எதிர்பாராதவிதமாக கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.  உத்தரகாண்ட் அடுத்த ரூர்க்கியின் குருகுல் நர்சன் பகுதியில் நிகழ்ந்தது. அவரது தாயாரை சர்ப்பிரைஸ் ஆக பார்க்க சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவித்திருந்தார்.


இந்த விபத்தில் அவருக்கு மூளை மற்றும் தண்டு வடத்தில் எந்த வித பிரச்சனையும் ஏற்படவில்லை என பி.சி.சி.ஐ. அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், நெற்றியில் ஏற்பட்ட வெட்டுக்காயத்திற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. மேலும் கை மற்றும் காலில் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சைப் பெற்று வந்த அவர்,  மேல்சிகிச்சைக்காக மும்பைக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து, கடந்த ஜனவரி 6 ஆம் தேதி பண்டிற்கு வலது முழங்காலில் தசைநார் கிழிவு அறுவை சிகிச்சை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.  விபத்தின்போது அவருக்கு வலது காலில் மூன்று தசைநார்கள் கிழிந்துள்ளது. அதில், இரண்டு தசைநார்கள் கடந்த ஜனவரி 60ம் தேதி அன்று அறுமை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டது. ஆனால், இன்னும் ஒரு அறுமை சிகிச்சை இன்னும் செய்யப்படவில்லை.  முன்புற தசைநார்கள், பின்புற தசைநார்கள், இடைநிலை இணை தசைநார்கள் ஆகியவை கடுமையாக பாதிகப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 








18 மாதங்களுக்கு ஓய்வு:











ரிஷப் பண்ட் உடல்நிலையில் முன்னேற்றம்:


ரிஷப் பண்ட் தனது உடல்நிலை குறித்த அப்டேட்டை இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். மாடி படியில் ஏறும் வீடியோவை பகிர்ந்து, “ சில சமயங்களில், சின்ன சின்ன விஷயங்களைச் செய்வது கூட கடினமாகிவிடும்.” என்று குறிப்பிட்டுள்ளார். இளம் வீரர் ரிஷப் பண்ட் விரைவில் குணமடைந்து அணிக்காக விளையாக வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.