கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக ஏராளமான இளைஞர்களை கவர்ந்த ஒரு சீரியலாக ஒளிபரப்பான தொடர் 'இதயத்தை திருடாதே'. இந்த சீரியலின் இரண்டாம் பாகமும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி நிறைவடைந்தது. அதே போல இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளை கொண்ட ஒரு பெண்ணான சக்தியை சுற்றிலும் நகர்ந்த கதைதான் 'அம்மன்' சீரியல். சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்ற இந்த இரு தொடர்களுக்கும் மீண்டும் மறு ஒளிபரப்பாகி வருகிறது.
இதயத்தை திருடாதே:
இதயத்தை திருடாதே தொடரில் சஹானா என்ற கதாபாத்திரத்தில் நடிகை பிந்துவும், சிவா என்ற கதாபாத்திரத்தில் நவீன் குமாரும் நடித்திருந்தனர். இந்த தொடரின் கதாநாயகியான சஹானா, சிவா ஒரு பெண்ணின் வாழ்க்கையை சீரழித்ததாக தவறாக நினைத்து கொண்டு அவன் மீது போலீசில் புகார் அளிக்கிறார். எந்த தவறும் செய்யாத சிவா, சஹானா தன் மீது பொய்யான ஒரு குற்றத்தை தன் மீது சுமத்தியதற்காக கடுங்கோபத்தில் அவளை பழிவாங்க வேண்டும் என்று துடிக்கிறான். அதனால் சஹானாவின் திருமணத்திற்கு முதல் நாள் அவளை கடத்தி செல்கிறான். அதற்கு பிறகு என்ன நடந்தது? சஹானாவின் திருமணம் நடைபெற்றதா? சஹானாவை யார் கடத்தினார்கள் என்பதை கண்டுபிடித்தார்களா? இது தான் இதயத்தை திருடாதே தொடரின் பின்னணி. இந்த தொடர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இந்த தொடரை நீங்கள் எந்த நேரத்திலும் ஜியோ சினிமாவில் கண்டுகளிக்கலாம்.
அம்மன் :
மாரியூர் கிராம மக்கள் சக்தியிடம் அம்மன் அருள் இருப்பதை முழுமையாக நம்புகிறது. ஊர் மக்களுக்கு என்ன பிரச்சனைகள் இருந்தாலும் அம்மனின் அருள் கேட்டு அவர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்கிறாள். சக்தியை வைத்து பணம் சம்பாதிக்கிறார்கள் அவளின் அக்காக்கள்.