சின்னத்திரை நடிகர்கள் அர்னவ் - திவ்யா பிரச்சனை முடிந்த பாடாக இல்லை. நாளுக்கு நாள் ஏதாவது ஒரு குற்றச்ச்சாட்டை இணையத்தில் ஒரு பேசுபொருளாக இருந்து வருகிறார்கள். மாறி மாறி கள்ளத்தொடர்பு குறித்து குற்றம்சாட்டி வந்தவர்கள் இடையே தற்போது பிரச்சனை நிகழ்வது வீட்டின் உரிமைக்காக. 

Continues below advertisement

தொடரும் சர்ச்சை :

காதலித்து திருமணம் செய்துகொண்ட சின்னத்திரை நடிகர்களான அர்னவ் மற்றும் திவ்யா கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். சில மாதங்களுக்கு முன்னர் திவ்யாவிற்கு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு பிறகு மீண்டும் தற்போது படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். அதே வேலையில் அர்னவின் முன்னாள் காதல், கள்ளத்தொடர்பு, பண மோசடி என ஏராளமான குற்றங்களை ஒன்றின்பின் ஒன்றாக அவர் மீது அடுக்கி வந்தார். கடுப்பான அர்னவ் திவ்யாவின் கள்ளத்தொடர்பு எனக்கூறி குற்றத்தை சுமத்தி வந்தார். இப்படி இவர்கள் இருவரின் இடையில் பல மோதல்கள் நடைபெற்று வரும் நிலையில் அடுத்ததாக வேறு ஒரு பிரச்சனை துவங்கியுள்ளது. 

Continues below advertisement

 

பவுன்சர்களுடன் அர்னவ் :

திருமணமானபோது அர்னவ் மற்றும் திவ்யா இருவரும் திருவேற்காட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். அவர்கள் இருவரும் பிரிந்த பிறகு தற்போது திவ்யா அந்த வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அர்னவ் வக்கீல் மற்றும் பவுன்சர்களுடன் குடியிருப்புக்கு அழைத்து சென்றுள்ளார். திவ்யா அவர்களை வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்துள்ளார். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. அக்கம் பக்கம் உள்ள குடியிருப்பில் இருந்தவர்கள் உடனே காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க உடனடியாக போலீசார் விரைந்துள்ளனர்.  

போலீசார் இருதரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அர்னவ் இந்த வீடு எனது பெயரில் உள்ளது, அத்துமீறி திவ்யா இந்த வீட்டுக்குள் இருப்பதால் உடனடியாக வெளியேற வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு திவ்யா இந்த வீட்டை வாங்குவதற்கு நான் எனது நகை, பணத்தை கொடுத்துள்ளேன். மேலும் நான்தான் இஎம்ஐ கட்டி வருகிறேன். அதனால் வீடு எனக்குத்தான் சொந்தமானது என தெரிவித்துள்ளார். போலீசார் இருவரையும் அவர்கள் தரப்பு ஆதாரங்களையும், ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கூறி அவர்களை வெளியேற்றியுள்ளனர்.