16 அணிகள் இடையிலான 15வது உலகக் கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசாவில் நடைபெற்று வருகிறது. இதில் , நேற்று லீக் சுற்று முடிவில் டி பிரிவில் 2வது இடத்தை பிடித்த இந்திய அணியும், சி பிரிவில் 3 வது இடத்தை பெற்ற நியூசிலாந்து அணியும் க்ராஸ் ஓவர் சுற்றில் விளையாடினர். 


பட்டியலில் இந்தியா 6-வது இடத்திலும், நியூசிலாந்து 12-வது இடத்திலும் இடத்திலும் உள்ளதால், இந்த போட்டியில் இந்திய அணி எளிதில் வெற்றிபெற்றுவிட்டு என்று எதிர்பார்க்கப்பட்டது. தொடக்கம் முதலே இரு அணிகளும் மாறி மாறி கோல் அடிக்க, ஆட்ட நேர முடிவில் இரண்டு அணிகளும் 4 கோல் அடித்து சம நிலையில் இருந்தன. 


இதையடுத்து, யார் வெற்றி யார் தோல்வி என நிர்ணயம் செய்ய பெனால்ட்டி ஷூட் - அவுட் கொண்டு வரப்பட்டது. இதிலும், இரு அணிகளும் 3-3 என சமநிலையில் தொடர்ந்ததால், சடன் டெத் முறைப்படி இரு அணிகளுக்கும் தலா ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில், ஏதேனும் ஒரு அணி கோல் அடிக்க தவறி, மற்றொரு அணி கோல் அடித்தால் அந்த அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும்.


இந்தநிலையில், சடன் டெத்தும் நீண்ட நேரமாக இழுத்துகொண்டே போக, இரு நாட்டு ரசிகர்களிடையும் பீதியடைய செய்தது. இறுதியில், நியூசிலாந்து அணி 5-4 என்ற கணக்கில் இந்திய அணியை தோற்கடித்து கால் இறுதி சுற்றுக்குள் நுழைந்தது. வெற்றி பெற்றுள்ள நியூசிலாந்து அணி காலிறுதியில் நடப்பு சாம்பியனான பெல்ஜியத்தை எதிர்கொள்கிறது.


இந்திய அணி அடுத்ததாக உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் 9 முதல் 12வது இடத்திற்கான போட்டிகளில் விளையாடும். 


அரைநூற்றாண்டு சோகம்:


கடந்த 1975ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய ஹாக்கி அணி அதன் பிறகு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் டாப் 4 க்குள் கூட வரவில்லை. தொடர்ந்து 48 ஆண்டுகளுக்கு மேலாக கோப்பைக்கு காத்திருக்கிறது. 


ஜீலை 10 - 2019 உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதி (இந்தியா-நியூசிலாந்து)


டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். தொடக்க வீரர்கள் ஆரம்பத்தில் ஏமாற்றம் அளித்தாலும், அடுத்து களமிறங்கிய கேப்டன் வில்லியம்சன் (95 பந்துகளில் 67 ரன்கள்) மற்றும் ராஸ் டெய்லர் (90 பந்துகளில் 74 ரன்கள்) ஆகியோர் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்த இறுதியில் நியூசிலாந்து 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது. 


இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.


240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிதான். இந்திய அணி, 71 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. நியூசிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் மாட் ஹென்றி அசத்தலாக பந்து வீசி தொடக்கதிலேயே 3 விக்கெட்களை கைப்பற்ற, இந்திய அணி 91 ரன்களுக்கே 6 விக்கெட்களை இழந்தது. 


அப்போதுதான் எம்எஸ் தோனியும் ரவீந்திர ஜடேஜாவும் தங்கள் அணியை மீண்டும் ஆட்டத்திற்கு கொண்டு வர பெரிய பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். தோனி (72 பந்துகளில் 50), ஜடேஜா (59 பந்துகளில் 77) ஆகியோர் 116 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தனர்.


48வது ஓவரில் ஜடேஜாவை வெளியேற்றிய டிரெண்ட் போல்ட் போட்டியின் மிக முக்கியமான திருப்புமுனையாய் அமைய, ஆட்டத்தின் 49வது ஓவரில், ஸ்கொயர் லெக் பகுதிக்கு தள்ளப்பட்டதை இரண்டு ரன்களாக மாற்ற தோனி  முயற்சி செய்தார். 


மார்ட்டின் கப்டிலின் வீசிய த்ரோ நேராக ஸ்டெம்பை பதம் பார்க்க, மில்லி மீட்டர் கணக்கில் தோனி ரன் அவுட்டாகி நடையைக்கட்டினார். அடுத்தடுத்து புவனேஷ்வர் குமார், சஹால் வெளியேற, இந்திய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. 


உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி (ஜீன், 2021) இந்தியா- நியூசிலாந்து:


இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் கடந்த 2021 ஜூன் மாதம் நடைபெற்றது. தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர், முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 4-வது நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்கள் எடுத்திருந்தது.


101/2 என்ற வலுவான நிலையில் மூன்றாவது நாள் ஆட்டத்தை நிறைவு செய்துள்ளது நியூசிலாந்து அணி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் நாள் மழையால் கைவிடப்பட, இரண்டாவது நாள் ஆட்டம் போதிய வெளிச்சம் இன்மையால் பாதியிலேயே தடைபட, இந்திய அணி 146/3 என்ற ஸ்கோருடன் 3வது நாள் ஆட்டத்தை துவங்கியது. களத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லியும், துணை கேப்டன் ரஹானேவும் நிற்க ரசிகர்கள் நம்பிக்கையுடன் 3வது நாளை எதிர்பார்த்தனர்.


44 ரன்களுடன் களத்தில் நின்ற விராட் கோஹ்லி, அடுத்த நாளில் ரன் கணக்கை தொடங்காமலேயே ஆட்டமிழந்தார். அடுத்ததாக உள்ளே வந்த இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் 4 ரன்கள் அடித்து ஆட்டமிழந்து வெளியேறினார். 146/3 என 3வது நாளை தொடங்கிய இந்திய அணியின் நிலைமை சில நிமிடங்களிலேயே 156/5 என மாறியது.


அதற்கு ஏற்ப ரஹானேவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது அரைசதத்தை நெருங்கிக் கொண்டிருந்தார். அப்போது ஷார்ட் பாலுக்கு பெயர் போன வேக்னர் வீசிய பந்தில் 49 ரன்கள் எடுத்திருந்த ரஹானே ஆட்டமிழந்தார். இதையடுத்து முதல் இன்னிங்சில் இந்திய அணி 217 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 


தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி 249 ரன்கள் அடித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி 2வது இன்னிங்ஸில் வெறும் 170 ரன்களில் சுருண்டது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் மட்டுமே 41 ரன்கள் எடுத்திருந்தார். 


140 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்து வெற்றிப்பெற்றது. உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் பட்டத்தையும் வென்றது. 



கிரிக்கெட்டோ, ஹாக்கியோ இந்திய அணி தொடர்ந்து நாக்-அவுட் சுற்றுகளில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியை சந்தித்து வருகிறது.