போர்ச்சுகல்  கால்பந்து அணியின் கேப்டனும், கால்பந்தாட்ட வீரருமான  கிறிஸ்டியானோ ரொனால்டோ சனிக்கிழமையன்று (24/09/2022) நடந்த  யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் தொடரில் ஒரு அதிபயங்கரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மான்செஸ்டர் யுனைடெட் சூப்பர் ஸ்டார் செக் குடியரசுக்கு எதிராக போர்ச்சுகல் அணி மோதியது. CR7 என்று கால்பந்தாட்ட உலகில் அழைக்கப்படும் கிரிஸ்டியனோ ரொனால்டோ, போட்டியின் முதல் பாதியில் தான் கிரிஸ்டியனோ ரொனால்டோவுக்கு காயம் ஏற்பட்டது. முதல் பாதியின் 12 வது நிமிடத்தில் கோல் போஸ்ட்டுக்கு அருகில் பந்து உயரத்தில் வரும்போது, கிரிஸ்டியனோ ரொனால்டோ அதனை, கோலாக மாற்ற நினைத்து, மிகவும் சிரமப்ட்டு, காற்றில் பறந்த கிரிஸ்டியனோ ரொனால்டோ செக் குடியரசு அணியின் கோல் கீப்பர் தாமஸ் வக்லிக்குடன் மிகவும் வேகமாகவும் எதிர்பாராத விதமாகவும் மோதினார். இதனால், கீழே விழுந்த கிரிஸ்டியனோ ரொனால்டோ வலியால் துடித்தார். 






உடனே முதல் உதவிக் குழு மைதானத்திற்கு விரைந்து அவருக்கு முதல் உதவி அளித்தது. ஆனால், கோல் கீப்பர் தாமஸ் வக்லிக்குடன் மிகவும் வேகமாக மோதியதில், அவரது முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. குறிப்பாக மூக்கில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிய தொடங்கியது. இதனால், மைதானத்தில் இருந்து இரத்தம் சொட்ட சொட்ட கிரிஸ்டியனோ ரொனால்டோ  வெளியேறினார். ஒரு பயங்கரமான காயத்தால் அவதிப்பட்ட போதிலும், ரசிகர்கள் யாரும் எதிர் பார்க்காத நேரத்தில் போட்டியில் கலந்து கொண்டு விளையாட மீண்டும்  கிரிஸ்டியனோ ரொனால்டோ  மைதானத்திற்கு திரும்பினார்.  அவரது வருகையின் போது மைதானம் முழுவதும் திரண்டிருந்த கால்பந்து விளையாட்டு ரசிகர்கள் அவரை கைதட்டி, பெரும் ஆரவாரத்துடன் வரவேற்றனர். 






இந்த போட்டியில், போர்ச்சுக்கல் அணி 4-0 என்ற கணக்கில் செக் குடியரசு அணியை வீழ்த்தியது. இந்த போட்டிக்கு பின்னர் கிரிஸ்டியனோ ரொனால்டோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்கு தெரிவித்ததாவது,  “சிறப்பான ஆட்டம், ஒரு அணியாக எங்களுக்கு முக்கியமான வெற்றி.  நாங்கள் எங்கள் இலக்கில் கவனம் செலுத்துகிறோம். எங்களுக்கு மிகவும் ஆதரவு அளிக்கும் போர்த்துகீசிய மக்களுக்கு நன்றி” என அவர் குறிப்பிட்டுள்ளார்.