தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில், மகாளய அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள், காவிரி ஆற்றில் புனித நீராடி காவிரி அன்னையை வணங்கி விட்டுச் செல்வது வழக்கம். இன்று புரட்டாசி மாத மகாளய அமாவாசை தினம் என்பதால், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பனம் கொடுப்பதற்காக  தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்கள் மட்டுமல்லாது அண்டை மாநிலமான கர்நாடக, மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் இன்று காலை முதலே ஒகேனக்கல் வந்தனர்.

 

தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளா கொரோனா பரவல் காரணமாக காவிரி ஆற்றில் அனுமதி வழங்கவில்லை. ஆனால் இந்த ஆண்டு மாவட்ட நிர்வாகம் ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இன்று மஹாளய அமாவாசை தினத்தையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பனம் கொடுக்க ஏராளமான பொதுமக்கள் காவிரி ஆற்றில் குவிந்தனர். தொடர்ந்து தங்களது முன்னோர்களுக்கு, வாழை இலை பச்சரிசி, தேங்காய், பழம், உணவுப் படையல் வைத்து பூஜை செய்து தர்ப்பனம் கொடுதது காவிரி ஆற்றில் மூழ்கி, குடும்பத்துடன் புனித நீராடினர். இதனையடுத்து ஆற்றங்கரையில் உள்ள காவிரி அம்மன் வணங்கி விட்டு சென்றனர். ஆனால் ஒகேனக்கல் அருவி மற்றும் காவிரி ஆற்றில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்த நிலையில், ஏராளமானோர் காவிரி ஆற்றில் முனோர்களுக்கு தர்ப்பனம் கொடுக்க குவிந்தனர். இதனால் கடந்த ஓராண்டுக்கு பிறகு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மக்கள் கூட்டம் கலை கட்டியது. அதே போல் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரியூர், நெருப்பூர், இருமத்தூர் போன்ற பகுதிகளில் உள்ள ஆற்று கரையோரங்களில் ஏராளமான பொது மக்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.



காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 14,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து 10,000 கன அடியாக குறைந்தது.

 

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வந்த தொடர் கனமழையால் காவிரி ஆற்றில் வினாடிக்கு 2 இலட்சம் கன அடி வரை நீர்வரத்து அதிகரித்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் மழை முற்றிலும் குறைந்ததால் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்துள்ளது. மேலும் கர்நாடக மாநில கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படுகின்ற நீரின் அளவு அடிப்படையாக குறைக்கப்பட்டு வருகிறது. இதனால் கடந்த மூன்று நாட்களாக காவிரி ஆற்றில்  தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 14,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று குறைந்து வினாடிக்கு 10,000 கன அடியாக சரிந்துள்ளது. 



 

மேலும் வெள்ளப்பெருக்கின் போது, ஒகேனக்கல்லில் பாதுகாப்பு அம்சங்கள் சேதமடைந்ததால், சுற்றுலா பயணிகளின் நலன் கருதி, பரிசல் செல்ல மட்டு அனுமதி வழங்கியும், அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்து வருகிறது. இந்த நிலையில் நீர் திறப்பு குறைக்கப்பட்டு வருவதால் காவிரி ஆற்றில் மேலும் நீர்வரத்து குறைய வாய்ப்புள்ளதாக மத்திய நீர் வள ஆண் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.