குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்தில் 36வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 29-ந் தேதி பிரதமர் மோடி இந்த தொடரை தொடங்கி வைத்தார். தேசிய விளையாட்டுப் போட்டிகளில் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பதக்கங்களை குவித்த வருகின்றனர்.


இந்த நிலையில், இன்று மகளிர்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இந்த போட்டியில் முன்னணி தடகள வீராங்கனை ஹிமாதாஸ், தமிழக வீராங்கனை அர்ச்சனா சுசீந்திரன் உள்பட ஏராளமான வீராங்கனைகள் பங்கேற்றனர்.






இந்த போட்டியில் முன்னணி வீராங்கனை ஹிமாதாசிற்கு மிகவும் போட்டியாக விளங்கிய தமிழக வீராங்கனை அவரை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார். தமிழக வீராங்கனை அர்ச்சனா சுசீந்திரன் 23.06 விநாடிகளில் 200 மீட்டர்களை கடந்து தங்கப்பதக்கத்தை வென்று அசத்தினார். முன்னணி வீராங்கனையான ஹிமாதாஸ் இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.


 






அதேபோல, 100 மீட்டர் தடைதாண்டும் போட்டியில் ஜோதி யர்ராஜூ 12.79 நொடிகளில் கடந்து தங்கப்பதக்கம் வென்றார். இது தேசிய அளவில் புதிய சாதனை ஆகும்.


இதேபோல, 109 கிலோ கிராம் பளுதூக்குதலில் ஆண்களுக்கான போட்டிப் பிரிவில், விபன்குமார் தங்கப்பதக்கத்தை வென்றார். ஹிதேஷ்கமார் வெள்ளிப்பதக்கம் வென்றார். ஸ்யோபத்சிங் வெண்கலம் வென்றார்.  


மேலும் படிக்க : T20 World Cup 2022: இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இவங்கதான் கலக்கப்போறாங்க.. ஐசிசி வெளியிட்ட லிஸ்ட்...


மேலும் படிக்க : IND vs SA 3rd T20: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 3-வது டி20 போட்டியிலிருந்து கோலி,ராகுல் விலகலா? காரணம் என்ன?