கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்துக்கு  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.              






30 வருட பார்ட்னர்ஷிப் :


மணிரத்னம் மற்றும் ரகுமானின் காம்போ சுமார் 30 ஆண்டுகளாக தொடர்கிறது. மணிரத்னம் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த ரோஜா திரைப்படத்தில் தான் ரகுமான் இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்த திரைப்படம் மாபெரும் ஹிட் ஆனது. பின்னணியை இசையும் பாடல்களும் பெருமளவில் பேசப்பட்டன. தில் சே, ஓகே கண்மணி, குரு, ராவணன்,  பொன்னியின் செல்வன்  என அன்று தொட்டு இன்று முதல் இவர்களின் காம்போ எப்பவுமே அல்டிமேட் தான். 


பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ரிலீஸ் மற்றும் ரகுமான், மணிரத்தினத்தின் 30 வருட பயணம் இரண்டிற்கும் சமர்ப்பணம் செய்யும் விதமாக பிரபல பிராண்டான அமுல் தனது சமூக வலைதள பக்கங்களில் இது குறித்த பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தது. ரஹ்மான் மற்றும் மணிரத்னம் ஆகியோரின் டூடுல் படங்கள் வரையப்பட்ட அந்த பதிவில் 30 வருட பார்ட்னர்ஷிப் என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இன்னும் நிறைய ஆண்டுகள் ஒன்றாக பயணிக்க வேண்டும் என்றும் வாழ்த்தியிருந்தனர். இந்த புகைப்படத்தை எடுத்து தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் அதற்கு பதில் கமெண்ட்டும் செய்துள்ளார்.






அதில் சில நேரங்களில் ''நான் வீகன் ஆக இருக்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் பலவிதமான சர்ச்சைகளை கிளப்பி உள்ளனர். சில சமயங்களில் வீகனாக உள்ளார் என்று குறிப்பிட்டதால் ஒரு சிலர் எப்பொழுதும் வீகனாக இருங்கள் என தாவரம் சார்ந்த உணவை ப்ரொமோட் செய்தும் மற்றொரு தரப்பினர் ரகுமான் அமுல் நிறுவனத்தை சுட்டிக்காட்டி உள்ளதாகவும் கூறியுள்ளனர். விலங்குகள் சார்ந்த மூலப்பொருட்களை நீக்கிவிட்டு முழுதும் தாவரம் சார்ந்த பொருட்களை தயாரிக்குமாறு கூறப்பட்டுள்ளதாகவும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் ரகுமான் விலங்குகளுகளின் பாதுகாப்பிற்காக உரிமைக் குரல் கொடுப்பதாக நெட்டிசன்கள் அவரைப் பாராட்டியும் வருகின்றனர்.