முறுக்கு மீசையுடன் புதிய தோற்றத்தில் தனது மகளுடன் தோனி இருக்கும் புகைப்படம் சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 


இந்திய அணி கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கடந்தாண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்று ரத்தான ஐபிஎல் தொடரில் சென்னனை சூப்பர் கிங்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்தினார். கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக ரத்து செய்யப்பட்ட ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக தோனி தயார்படுத்தி வருகிறார். இதனிடையே, தனது குடும்பத்தாரிடம் நேரத்தை கழித்து வருகிறார். அதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகும். வெளியாகும் புகைப்படங்களில் தோனியும் புது புது லுக்கில் இருப்பார். அது சாதரணமாக இருந்தாலும் தோனியின் ரசிகர்கள் அதனை ஷேர் செய்து வைலாக்கி விடுவார்கள்.


இந்நிலையில், புது ஸ்டைலில் இருக்கும் தோனியின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அந்தப் புகைப்படத்தில், முறுக்கு மீசையுடன் தோனி வலம் வருகிறார். அவருடன் அவருடைய மகள் ஷீவாவும் உடன் உள்ளார். இந்தப் புகைப்படம்தான் தற்போது சமூகவலைதளங்களில் வைரல் ஹிட்.




முன்னதாக, திமுக பொது செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் டெல்லியில் தோனியை சந்தித்தனர்.  இந்தச் சந்திப்பின் துரைமுருகனின் மகனும், வேலூர் எம்பியுமான கதிர் ஆனந்தும் உடன் இருந்தார். தோனியுடன் அவரது மனைவி சாக்‌ஷி மற்றும் மகள் ஷீவா ஆகியோர் உடன் இருந்தனர். இந்தச் சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைபெற்றது என்று கூறப்படுகிறது. இந்தப் புகைப்படமும்  சமூகவலைதளங்களில் வைரலானது.


 






மேலும், தோனி உடன் மகள் ஷிவா இருக்கும் புகைப்படமும் வெளியாகி உள்ளது.






 


அத்துடன் தனது செல்ல நாயை ஜீவா கொஞ்சி தடவிக் கொடுக்கும் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. அதுவும் சமூகவலைதளங்களில் வைரலாகிறது.