கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் மணிகண்டன். அதிமுக ஆட்சியில் இருக்கும்போதே இவரை அமைச்சர் பொறுப்பில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கியதுடன், கடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் மறுக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த மாதம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், புகார் அளித்த நாடோடி புகழ் நடிகை சாந்தினி. முன்னாள் அமைச்சர் மணிகண்டன், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும், அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும் புகார் அளித்தார்.



முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் மணிகண்டனின் ஜாமீன் மனு ரத்தான நிலையில் தலைமறைவாக இருந்த மணிகண்டன் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். 


இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜார் படுத்திய மணிகண்டனை வரும் ஜூலை 2 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அடைக்க உத்தரவிடபட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று நீதிபதி செல்வகுமார் முன் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அடையார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விளக்கம் பெற்று தெரிவிக்க அவகாசம் கேட்டதை அடுத்து வழக்கு விசாரணை ஜூன் 24ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.