முன்னாள் ஃபைட்டர் மைக் டைசனின் சொகுசு கார் ஓட்டுநர் ரூடி கோன்சலேஸ், பிரிட்டிஷ் செய்தித்தாள் உடனான நேர்காணல் ஒன்றில், "சண்டை நடக்கும் இரவுகளில் டைசனுடன் உடலுறவு கொள்ள விரும்பும் பெண்களைக் கண்டுபிடிப்பது தனது வேலைகளில் ஒன்றாகும்" என்று கூறினார். மேலும் "மைக்கின் மிகப்பெரிய ரகசியம் என்னவென்றால், அவர் சண்டையிடுவதற்கு முன்பு லாக்கர் ரூமில் உடலுறவு கொள்ள வேண்டும்" என்று கோன்சலஸ் கூறினார். அவர் மைக் டைசனுடைய ரசிகை குழுக்களை தேடி செல்வாராம். தேடி சென்று அவர்களில் யாருக்கு விருப்பம் உள்ளதோ அவர்களை அழைத்து வருவாராம். மைக் டைசனுக்கு வருபவர் இப்படிதான் இருக்க வேண்டும் என்ற கட்டாயமெல்லாம் ஒன்றும் இல்லையாம். "எந்த பெண் வருகிறார் என்பது பற்றி அவர் கண்டுகொள்வதில்லை, அவருக்கு எப்படி இருந்தாலும் பிரச்சனை இல்லை. 'இப்போது நான் செக்ஸ் செய்யவில்லை என்றால் ரிங்கில் இருப்பவனை கொன்றுவிடுவேன்' என்று என்னிடம் கூறுவார். மைக் டைசனுக்கு போட்டியில் கலந்துகொள்ளும் முன் அவருடைய சில பலங்களை, எனர்ஜியை இழக்க வேண்டும். அதற்காக குளியல் அறையிலோ, உடை மாற்றும் அறையிலோ நான் பெண்களை அழைத்து வந்து வைத்திருப்பேன்." என்று கூறியிருந்தார்.



அந்த பெண்களுடன் உடலுறவில் ஈடுபட பிறகு போட்டிக்கு கிளம்பும்போது செய்வதை பற்றி கூறுகையில், "சில நேரங்களில் அவர்களுடன் உள்ளே சென்றுவிட்டு வந்து கழுத்தை அசைத்தபடி, "சரி… இன்னைக்கு அவன் உயிரோட இருப்பான்" என்று கூறுவார். அவர் கொன்றுவிடுவாரோ என்ற பெரிய பயம் அவரிடம் இருந்தது." என்று கூறினார். 5.10 அங்குலம் உயரம் கொண்ட ஃபைட்டாரான மைக் டைசன் மிக அதிகமான டிஃபன்ஸ் சக்தியும் கொடூரமான அளவிற்கு அடிக்கும் திறனும் கொண்டிருந்தார். ஆகையால் ஒரு சில ரவுண்டுகளிலேயே எதிராளியை வெற்றி கொள்வது அவருக்கு மிகவும் எளிய விஷயம். 1986 ல் அவருடைய முதல் ஹெவி வெயிட் சாம்பியன்ஷிப் சண்டையில் ட்ரெவர் பேர்பிக்கை இரண்டே ரவுண்டில் முடித்தார். அதற்கு இரு வருடம் பின்பு 1988 ல் லேரி ஹோம்ஸை நான்கே ரவுண்டுகளில் வெற்றி கண்டார். அதே வருடத்தில் மைக்கல் ஸ்பிங்க்ஸை ஒரே ரவுண்டில் முடித்திருந்தார். 



மேலும் கோன்சலேஸ் பேசுகையில், "இவரிடம் அடி வாங்கியவர்கள் ரயிலில் அடிப்பட்டதுபோல கிடந்தார்கள் என்றால் மிகையாகாது. உடலுறவு செய்வது அவரை பொறுத்தவரையில் எனர்ஜியை இழப்பது, அவ்வளவுதான். டி'அமேட்டோ என்பவர்தான் மைக் டைசனுக்கு பயிற்சியாளராகவும், தந்தை ஸ்தானத்திலும் இருந்தவர் அவர்தான். அவர் 1985 ல் மறைந்த பிறகு அதிலிருந்து வெளியில் வர மிகவும் சிரமப்பட்டார். சண்டைக்கு செல்லும் முன்பு அழுவார். அந்த நேரத்தில் மிகவும் மன அழுத்தத்துடன் இருந்தார். அவருடைய மறைவை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை, ஏனென்றால் அவர் மீது நம்பிக்கை வைத்த ஒருவர், அவரை நரக வாழ்விற்கு செல்லவிடாமல் காத்தவர் என்று அடிக்கடி கூறுவார். உணர்வுகளை வெகு நாட்களுக்கு உள்ளுக்குள் பதிந்து வைப்பவராக இருந்தார், அதனை தான் அவர் ரிங்கிற்குள் வெளிப்படுத்துகிறார்." என்று கூறியிருந்தார்.