இன்ஸ்டாகிராமில் நாய்க்குட்டி பூனைக்குட்டி வீடியோக்களைப் பார்க்கும் ரசிகர்களுக்குப் பஞ்சமில்லை. டாக் லவ்வர்ஸ் பக்கம் , பப்பிஸ் அண்ட் டாக்ஸ் என இதற்காகவே பல பக்கங்கள் தீவிரமாக பலகோடி வீடியோக்களுடன் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு நாளையும் நாய் பூனை வீடியோக்களுடன் தொடங்குபவர்கள் இங்கு நிறையபேர் உண்டு. 



அந்த வகையில் இந்த வீக்கெண்ட்டை ஒரு க்யூட்டான மனதுக்கு நெருக்கமான நாய் வீடியோவுடன் நீங்கள் தொடங்க வேண்டும் என நினைத்தால் இந்த வீடியோவை மறக்காமல் பாருங்கள்.  பங்களாதேஷின் சிட்டகாங் பகுதியில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. மோட்டார் போட் ஒன்று நீரில் வேகமாகப் பாய்ந்து செல்கிறது. படகின் வேகத்துக்கு ஈடுகொடுத்து ஒரு நாய் கரையில் வேகமாக நாலு கால் பாய்ச்சலில் ஓடி வருகிறது. படகில் இருக்கும் யாருக்கும் நாய் ஏன் ஓடிவருகிறது என்பது முதலில் புரியவில்லை.


சுமார் ஒரு நிமிடத்துக்கும் மேல் நாய் ஓடி வருவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. படகு மெல்ல நின்றதும் பொறுமையாக படகை நோக்கி வரும் அந்த நாய் படகை ஓட்டி வருபவரிடம் செல்கிறது. பிறகுதான் படகை ஓட்டி வரும் அந்த நபர் நாயின் நண்பன் எனத் தெரிகிறது. தனது நண்பனுக்கு ஹேண்ட் ஷேக் கொடுக்கும் அந்த நாய் பிறகு படகில் ஏறிக்கொள்கிறது. தனது நண்பனிடம் வந்தடைவதற்காக அவ்வளவுதூரம் அந்த நாய் பயணித்து வருவது அனைவரது நெஞ்சையும் உருக்குவதாக உள்ளது.


இது போன்ற மேலும் சில க்யூட் நாய் வீடியோக்கள் கீழே...