மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே பல்லவராயன்பேட்டை கிராமத்தில் சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிட பள்ளி உள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் சமுதாய மாணவர்கள் பயிலும் இப்பள்ளியில், ஏழாம் வகுப்பு படிக்கும் ஆர்‌.சாமுவேல் என்ற நரிக்குறவ சமுதாய மாணவர் சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறையால் நடத்தப்பட்ட மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் கலந்துக்கொண்டார்.




இந்தப் போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து 1440 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.  அந்த போட்டியில் அவர் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மாநில போட்டியில் பதக்கம் வென்று ரயில் மூலம் சொந்த ஊர் திரும்பிய மாணவனுக்கு மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் திரளான நரிக்குறவர் சமுதாயத்தினர் ஒன்று திரண்டு உற்சாக வரவேற்பளித்தனர்.


Watch Video : பில்லகலி பாடலின் புதிய வர்ஷன் பாக்கணுமா? திரிஷா போலவே ஆடிய மகேஷ் பாபு மகள்..




பள்ளி நிர்வாகி விஜயசுந்தரம் தலைமையில் ரயில் நிலையம் வந்த அம்மக்கள், வெற்றி பெற்ற மாணவன், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் ஆசைத்தம்பி ஆகியோருக்கு சால்வை, மாலை அணிவித்தும்,  ஊசிமணி மாலையினை அணிவித்து, வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கிருந்து அவர்கள் ஊர்வலமாக அழைத்து சென்று மயிலாடுதுறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.


Watch Video: ’என்ன நடந்ததோ அது என்னுடைய இஷ்டப்படிதான் நடந்தது..’ காதல் திருமணம் செய்த தென்காசி பெண் ட்விஸ்ட் வீடியோ