இளைஞர்களுக்கான கேலோ இந்தியா விளையாட்டுகளின் நீச்சல் போட்டியில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த், 200 மீட்டர் ஃபிரீ ஸ்டைல் பிரிவில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். மகாராஷ்டிரா அணிக்காக விளையாடிய அவர் பந்தய தூரத்தை வெறும் ஒரு நிமிடம் 55 விநாடிகளில் கடந்து அசத்தியுள்ளர். வேதாந்த் தொடர்ந்து, பல்வேறு சர்வதேச நீச்சல் போட்டிகளிலும் பதக்கங்களை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, இளைஞர்களுக்கான கேலோ இந்தியா விளையாட்டுகளின் நீச்சல் போட்டியில் மகளிருக்கான 100 மீட்டர் ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில், மகாராஷ்டிராவை சேர்ந்த அபெக்ஷா பெர்னாண்டஸ் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இவர் பந்தய தூரத்தை ஒரு நிமிடம் 13 விநாடிகளில் கடந்து பதக்கத்தை கைப்பற்றினார்.
பதக்கப்பட்டியல்:
இளைஞர்களுக்கான கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளின் எட்டாவது நாள் முடிவில், 28 தங்கம், 30 வெள்ளி மற்றும் 25 வெண்கல பதக்கங்களுடன் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அடுத்ததாக 23 தங்க பதக்கங்களுடன் ஹரியானா மாநிலம் இரண்டாவது இடத்தில் உள்ளது.