இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வந்த காமன்வெல்த் போட்டித் தொடர் நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்த போட்டித் தொடரில் இந்திய அணி கடைசி நாளான நேற்று பதக்க மழையை பொழிந்தது. தங்கம், வெள்ளி, வெண்கலம் என்று நேற்று இந்தியா தன்னுடைய பதக்க எண்ணிக்கையை உயர்த்தியது.
பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் லக்ஷயா சென் அபாரமாக ஆடி தங்கப்பதக்கத்தை வென்றார். போட்டியை வென்ற பிறகு அவர் தனது டீ சர்ட்டை கழற்றி ஆரவாரம் செய்தது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி, அவர் அவ்வாறு டீ சர்ட்டை கழற்றி ஆரவாரம் செய்தது 2002ம் ஆண்டு இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. அப்போது, லார்ட்ஸ் பால்கனியில் நின்ற இந்திய கேப்டன் கங்குலி டீ சர்ட்டை கழற்றி சுழற்றி பிளின்டாப் செய்ததற்கு பழிதீர்த்தார். இந்த சம்பவம் இன்று வரையிலும் கிரிக்கெட் வரலாற்றின் மிகப்பெரிய சம்பவமாகவே கருதப்படுகிறது.
இந்த நிலையில், லக்ஷயா சென்னும் அதே போல நேற்று டீ சர்ட்டை கழற்றி சுழற்றியது ரசிகர்களுக்கு கங்குலி பாணி செலிபிரஷனை நினைவுபடுத்தியது. 20 வயதான லக்ஷயா சென் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் மலேசியாவின் நிக்சே யங்குடன் மோதினர். இந்த போட்டியில் மலேசிய வீரர் யங் சிறப்பாக ஆடி முதல் செட்டை கைப்பற்றினார்.
ஆனால், அதன்பின்பு இந்திய வீரர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால், லக்ஷயா சென் இரண்டாவது செட்டை 21-9 என்ற கணக்கில் வென்றார். தங்கத்தை வெல்லப்போவது யார்? என்ற கடைசி செட் இரு வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும் இந்திய வீரர் லக்ஷயா சென் 21-16 என்ற கணக்கில் அபாரமாக ஆடி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.
தற்போது, லக்ஷயா சென்னின் கொண்டாட்ட புகைப்படமும், சவ்ரவ் கங்குலியின் புகைப்படமும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க : PV Sindhu Wins Gold: “அர்ப்பணிப்பு பிரமிக்க வைக்கிறது” - தங்கமகள் பி.வி.சிந்துவுக்கு பிரதமர் மோடி பாராட்டு..!
மேலும் படிக்க : Chess Olympiad 2022: செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா.. தல தோனி பங்கேற்கவில்லையா? என்னென்ன சிறப்பம்சங்கள் ?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்