Khelo India 2025: மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள இளைஞர்களின் விளையாட்டுத் திறனை வளர்க்கும் விதமாக கேலோ இந்தியா என்ற விளையாட்டுப் போட்டித் தொடரை நடத்தி வருகிறது. 


கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள்:


இதில் மாநில வாரியாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்பது வழக்கம். இந்த குளிர்கால கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் காஷ்மீரில் நடைபெற்றது. 






இந்த தொடர் நிறைவடைந்த நிலையில் இதில் தமிழ்நாடு இரண்டாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது. தமிழ்நாடு 3 தங்கம், 2 வெள்ளி உள்பட 5 பதக்கங்களைப் பிடித்து அசத்தியுள்ளது. முதலிடத்தை லடாக் தட்டிச் சென்றது. 4 தங்கம், 2 வெள்ளி மற்றும் 1 வெண்கலத்துடன் 7 பதக்கங்களுடன் லடாக் முதலிடத்தைப் பிடித்து அசத்தியது. 


கேலோ இந்தியா குளிர்கால தொடர் புள்ளிப்பட்டியல்:


1. லடாக் - 4 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கள்


2. தமிழ்நாடு - 3 தங்கம், 2 வெள்ளி 


3. மகாராஷ்ட்ரா - 2 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம் 


4. தெலங்கானா - 2 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம்


5. கர்நாடகா - 1 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம்


6. ராணுவம்  - 1 தங்கம்


7. இந்தோ திபெத் எல்லைப் படை - 2 வெள்ளி


8. ஹரியானா - 2 வெண்கலம்


9. இமாச்சல பிரதேசம் - 2 வெண்கலம்


10. டெல்லி - 1 வெண்கலம்


11. மத்திய பிரதேசம் - 1 வெண்கலம்


புள்ளிப்பட்டியலில் தங்கத்தை அடிப்படையாக கொண்டே முதலிடம், இரண்டாமிடம் அளிக்கப்படும் என்பதால் லடாக் முதலிடத்தில் உள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்ட்ரா 10 பதக்கங்களை வென்றுள்ளது.  இதில் அதிக பதக்கம் வாங்கிய ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு முதலிடத்திலும், மகளிர் பிரிவில் 3வது இடத்திலும் உள்ளது. இந்த தொடரில் ஐஸ் ஹாக்கி, ஐஸ் ஸ்கேட்டிங் உள்ளிட்ட பல போட்டிகள் நடத்தப்பட்டது. 


லே மற்றும் ஜம்முவில் கேலாே இந்த போட்டிகள் நடைபெற்றது. மொத்தம் 19 அணிகளாக 400 வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்றனர். லடாக் முதலிடம் பிடித்ததற்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.