கிரிக்கெட், ஹாக்கி போன்ற விளையாட்டுகள் போல நாட்டின் மற்ற விளையாட்டுகளையும் பிரபலப்படுத்த வேண்டும், விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.


கேலோ இந்தியா:


இந்த நிலையில், நடப்பாண்டிற்கான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் மோடி சென்னையில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.






உற்சாக நடனம்:


சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல நகரங்களில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கேலோ இந்தியா விளையாட்டில் பங்கேற்கும் சிறுவர், சிறுமிகள் உள்பட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளை உற்சாகப்படுத்துவதற்காக இசை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியில் ஒலிக்கப்பட்ட பாடல்களுக்கு அங்கிருந்த சிறுவர்கள், சிறுமிகள் உற்சாக ஆட்டம் போட்டனர். பிரேமம் படத்தில் இடம்பெற்ற பாடல் மற்றும் லியோ படத்தில் இடம்பெற்ற நான் ரெடிதான் பாடல் ஒலிக்க, அவர்கள் உற்சாகமாக ஆடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும், வீரர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக சின்ன சின்ன ஆசை பாடலும் இசைக்கலைஞர்களால் பாடப்பட்டது.






கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இன்று நடக்கும் கேலோ இந்தியா தொடரில் யோகாசனம், ஹாக்கி, மல்லகாம்ப், கட்கா, பேஸ்கேட்பால் உள்ளிட்ட போட்டிகள் நடந்து வருகிறது.


மேலும் படிக்க: Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்கும் கிரிக்கெட் பிரபலங்கள் யார்? யார்?


மேலும் படிக்க: Sania Mirza khula: “குலா” என்றால் என்ன? சோயப் மாலிக்கிடம் இருந்து சானியா மிர்சா விவாகரத்து பெற்றது எப்படி?