Sania Mirza - Shoaib Malik: சானியா மிர்சா - சோயப் மாலிக்கின் பிரிவை தொடர்ந்து, ”குலா” என்ற வார்த்தை இணையத்தில் வைரலாகியுள்ளது.


சோயப் மாலிக் திருமணம்:


பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக், அதே நாட்டைச் சேர்ந்த நடிகை சனா ஜாவத்தை திருமணம் செய்து கொண்டது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக பல்வேறு வதந்திகள் வெளியான நிலையிலேயே, கணவர் சோயப் மாலிக்கை விட்டு பிரிந்த இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தனது மகனுடன் தனித்து வசித்து வருகிறார். இந்நிலையில் சோயப் மாலிக்கின் 3வது திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக, அவரிடமிருந்து தனது மகள் ' குலா' பெற்றதாக சானியா மிர்சாவின் தந்தை அறிவித்துள்ளார்.


”குலா” என்றால் என்ன?


சானியா மிர்சாவின் தந்தையின் அறிவிப்பை தொடர்ந்து, குலா என்றால் என்ன என்பது தொடர்பான தேடுதல் இணையத்தில் அதிகரித்துள்ளது.  'குலா' என்பது ஷரியா சட்டத்தின் கீழ் ஒருதலைப்பட்சமாக கணவனை விவாகரத்து செய்ய இஸ்லாமிய பெண்களுக்கு வழங்கப்பட்ட ஒரு உரிமை ஆகும். இந்த செயல்முறையில், கணவன் பணத்த எடுத்துக்கொண்டு அல்லது அதற்கு ஒப்புக்கொண்டு மனைவியைப் பிரிந்து செல்வது விவாகரத்தாக கருதப்படுகிறது. இந்த நடைமுறையின்போது கணவன் தனது மனைவியிடம் 'நான் உன்னைப் பிரிந்துவிட்டேன்' என்று பொருள்படும் வகையில் 'ஃபராக்துகி' என்று கூறுவர்.  அல்லது 'உன்னை விடுவித்தேன்' என்று பொடுள்படும் 'கலா கி' என்ற வார்த்தையும் கணவனால் சொல்லப்படுகிறது. இந்த முறையை பின்பற்றி தான், தனது மகள் சோயப் மாலிக்கிடம் இருந்து விவாகரத்து பெற்றதாக சானியா மிர்சாவின் தந்தை அறிவித்துள்ளார்.


3வது திருமணம் செய்த சோயப் மாலிக்:


ஐதராபாத்தில் பிறந்து வளர்ந்த ஆசியரியராக பணியாற்றி வந்த ஆயிஷா சித்திக் என்பவரை, கடந்த 2002ம் ஆண்டு சோயப் மாலிக் திருமணம் செய்து கொண்டார். 8 ஆண்டுகள் இருவரும் சேர்ந்து வாழ்ந்த நிலையில், 2010ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். விவாகரத்து வாங்கிய அதே ஆண்டின் இறுதியில் அதே ஐதராபத்தில் பிறந்து வளர்ந்த இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவை திருமணம் செய்துகொண்டார். விளையாட்டுலகில் பிரபலமான தம்பதியாக இருந்த இவர்களுக்கு, 5 வயதில் இஷான் என்ற மகன் உள்ளர்.  இந்நிலையில் தான் சானியா மிர்சாவிடம் இருந்து பிரிந்து, நடிகை சனா ஜாவத்தை சோயாப் மாலிக் திருமணம் செய்துள்ளார். இதனிடையே, சனா ஜாவத், கடந்த 2020ம் ஆண்டு உமைர் ஜஸ்வால் என்ற பாடகரை திருமணம் செய்து இருந்தார். தற்போது அவரை விட்டு பிரிந்து சோயப் மாலிக்கை ஜாவத் கரம்பிடித்துள்ளார்.