உத்தரபிரதேசம் உள்பட வட இந்தியா முழுவதும் ராமர் கோயில் திறப்பு விழாவிற்காக களைகட்டியுள்ளது. நாளை கோயில் திறப்பு விழா நடைபெற உள்ளதால், நாடு முழுவதும் உள்ள ராமர் பக்தர்கள் அயோத்தியில் குவியத் தொடங்கியுள்ளனர்.


ராமர் கோயிலை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாலும், இந்தியாவில் உள்ள பிரபலங்கள் யாவரும் அங்கு திரள உள்ளதாலும் ஒட்டுமொத்த அயோத்தியும் பாதுகாப்பு வளையத்தில் உள்ளது. அயோத்தி ராமர் கோயிலில் வைக்கப்பட்டுள்ள குழந்தை ராமர் சிலை பக்தர்களை நெகிழ வைத்துள்ள நிலையில், தொடக்கம் முதலே ராமர் கோயில் கட்டுமான பணிகள் பக்தர்களின் கவனத்தை பெற்று வந்தது.


இந்த நிலையில், ராமர் கோயிலின் உள்ளே எடுக்கப்பட்ட கண்கவர் வீடியோ வெளியாகியுள்ளது. முழுவதும் பளிங்கு கற்களால் ஆன தரை, கோயில் தூண்கள் வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காட்சிகள் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. மேலும், கட்டுமான பணியாளர்கள் ஆங்காங்கே பணிபுரிந்து வருவதும் இடம்பெற்று வருகிறது.






இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ராம பக்தர்கள் இந்த வீடியோவிற்கு கீழே தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு அயோத்தி முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


இந்த விழாவில் பிரதமர், மத்திய அமைச்சர், திரை பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், இந்திய மற்றும் வெளிநாட்டு தொழிலதிபர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்கின்றனர். ராமர் கோயில் திறப்பு விழாவில் நாடு முழுவதும் உள்ள பல முக்கிய மடங்களின் சங்கராச்சாரியர்களும், துறவிகளும் பங்கேற்க உள்ளனர்.


மேலும் படிக்க: Watch Video: பென்சில் நுனியில் அயோத்தி ராமர் சிலை! கின்னஸ் சாதனையாளர் அசத்தல்!


மேலும் படிக்க: Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்கும் கிரிக்கெட் பிரபலங்கள் யார்? யார்?