ITF W60 Evansville போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சானியா மிர்சாவுக்குப் பிறகு அமெரிக்காவில் Pro பட்டத்தை வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை கர்மன் கவுர் தண்டி பெற்றார். அவர் 7- 5 4-6 6-1 என்ற கணக்கில் உலகின் நம்பர் 294 - வது இடத்தில் உள்ள யூலியா ஸ்டாரோடுப்ட்சேவாவை தோற்கடித்து பட்டத்தை வென்றது மட்டுமின்றி, 2023 ஆம் ஆண்டுக்கான யுஎஸ் ஓபன் தகுதிச் சுற்றுக்கும் தகுதி பெற்றுள்ளார்.
சமூக ஊடகங்களில், அவர் இந்த சாதனைக்கு பின்னர், தனது எண்ண ஓட்டங்களைப் பகிர்ந்துள்ளார், அதில், "உங்கள் நம்பிக்கை பலப்படுத்தப்பட்டால் கட்டுப்பாடு உணர்வு இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை நீங்கள் காண்பீர்கள், அவை விரும்பியபடி நடக்கும், உங்கள் மிகுந்த மகிழ்ச்சிக்கும் நன்மைக்கும் நீங்கள் அவற்றுடன் சேர்ந்து ஓடுவீர்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
இவருக்கு இந்திய டெஸ்ஸின் அமைப்புகளில் இருந்தும் ரசிகர்களிடம் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இதையும் படிங்க..