டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்தியா பதக்கங்களை குவித்து வருகிறது. இன்று நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில், இந்தியாவின் தேவேந்திர ஜஜாரியா வெள்ளிப்பதக்கமும், குர்ஜார் சிங் வெண்கலப் பதக்கமும் வென்று அசத்தியுள்ளனர். இதனால், ஒரே நாளில் இந்தியா நான்கு பதக்கங்களை வென்று வரலாற்று சிறப்புமிக்க பர்ஃபாமென்சை பதிவு செய்துள்ளது.
பாராலிம்பிக் போட்டிகளை பொருத்தவரை, உலகெங்கிலும் இருந்து வெவ்வேறு பாதிப்புகளுடன் வீரர், வீராங்கனைகள் போட்டியிடுவர். அவர்களது, உடல் பாதிப்புகள் ஒருவரை ஒருவரிடம் இருந்து வித்தியாசப்பட்டிருக்கும். இதனால், ஒரு விளையாட்டில் வெறும் ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளின் கீழ் பிரிக்காமல், வெவ்வேறு பாதிப்புகளைப் பொருத்து பிரிவுகள் பிரிக்கப்படும். அந்த பிரிவுகளின்கீழ் வீரர் வீராங்கனைகள் போட்டியிடுவர். ஒரே விளையாட்டின் கீழ் பிரிக்கப்படும் பிரிவுகளை சில குறியீடுகளை கொண்டு அடையாளப்படுத்துவர். அந்த வகையில், ஆண்களுக்கான ஈட்டி எறிதல் எஃப்-52 பிரிவில் மூன்று இந்திய வீரர்கள் போட்டியிட்டனர்.
இதில், இரண்டு முறை ஒலிம்பிக் தங்கப்பதக்கம் வென்ற ஜஜாரியா 64.35 மீட்டர் தூரம் வீசி வெள்ளிப்பதக்கமும், குர்ஜார் சிங் 64.01 மீட்டர் வீசி வெண்கலப் பதக்கமும் வென்றனர். மற்றொரு வீரரான அஜீத் சிங் 56.15 மீட்டர் வீசி எட்டாவது இடத்தில் நிறைவு செய்தார். இலங்கையைச் சேர்ந்த தினேஷ் ப்ரியன் 67.79 தூரம் வீசி மிக முன்னிலை பெற்று தங்கப்பதக்கம் வென்றார்.
இந்தியாவின் பாராலிம்பிக் வீரர்களில் மிகவும் பரிச்சயமான பெயர் தேவேந்திர ஜஜாரியா. தனது 40+ வயதில் பாரலிம்பிக் நம்பிக்கை நட்சத்திரமாக தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டுள்ளார். ரியோவில் பதக்கம் வென்ற வீரரான இவர், ஈட்டி எறிதல் போட்டியில் இம்முறையும் இந்தியாவுக்கு பதக்கம் வென்று தருவார் என்ற நம்பிக்கையை உறுதி செய்துள்ளார்.
ஈட்டி எறிதல் போட்டியில், ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றிருக்க வேண்டிய வீரர். போட்டி தளத்திற்கு 52 நொடிகள் தாமதமாக சென்றதால், போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். 25 வயதான சுந்தர் சிங், இம்முறை கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் பதக்கத்தை வென்றுள்ளார்.
Also Read: தங்கத்திலும் சேமிக்கலாம்.. லலிதா ஜூவல்லரியின் நகை முன்பதிவுத் திட்டம்!