மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 4 பேரை போலீஸ் தீவிரமாக தேடிவரும் நிலையில் மற்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

 

மதுரை நகர் பகுதியில் சில இடங்களில் மஜாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில் செய்யப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் இது போன்ற குற்றம் தொடர்பாக அவ்வப்போது  சில போலி மஜாஜ் சென்டர்கள் பிடிபட்டு வருகிறது. இது போன்ற மஜாஜ் சென்டர்களை அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 4 பேர் போலீஸ் தீவிரமாக தேடிவரும் நிலையில் மற்ற இரண்டு பேரை போலீஸ் கைது செய்துள்ளனர்.
 




மதுரை காமராஜர் சாலையில் (Blooming Day Spa) 'ப்ளூமிங் டே ஸ்பா' என்ற பெயரில் மசாஜ் சென்டரை கடந்த 2 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு பாலியல் தொழில் நடப்பதாக ஆள்கடத்தல் தடுப்புப்பிரிவு ஆய்வாளர் பிளவர் ஷீலாவுக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. இதனையடுத்து அங்கு நேரில் சென்று  விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது மேற்கு வங்காளம், கர்நாடகாவைச் சேர்ந்த 2 பெண்கள், மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பெண்களை போலீசார் மீட்டனர்.

இதை சற்று கவனிக்கவும் பாஸ் - *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*



மசாஜ் சென்டர் ஊழியர்களாக பணிபுரிந்த மதுரை மேலமாசிவீதியை சேர்ந்த சதீஷ், அம்மன் தெருவை சேர்ந்த ஷாலினி ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த மசாஜ் சென்டரை நடத்திவந்த அதன் உரிமையாளர்களான மதுரை அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த நபர் என்று சொல்லப்படுகிறது. பட்டாளி மக்கள் கட்சியின்  மாநில இளைஞரணி துணைத்தலைவர் பதவி வகித்து வருகிறார். 

மதுரை மாவட்டம் தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் -ஒருவர் கை பக்குவத்தில் ஊரே சமைக்கும் எண்ணெய் சுக்கா! இது தான் மதுரையோடு பக்கா!



தேடப்படும்  4 பேரும் கடந்த 2 ஆண்டுகளாக முகவர்கள் மூலமாக வெளி மாநிலங்களில் இருந்து பெண்களை வரவழைத்து, மசாஜ் சென்டர் என்று போலியாக சான்று பெற்று பெண்களை பணிக்கு அமர்த்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளது தெரியவந்துள்ளது. மசாஜ் சென்டருக்கான மொபைல் ஆஃப் மூலமாக தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்களை நேரில் அணுகி பாலியல் தொழிலுக்கு அழைத்து வந்து பணம் வசூலித்துள்ளனர்.