ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை


அஜர்பைஜானின் பாகுவில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பையில் இளவேனில் வளரிவன், ரமிதா மற்றும் ஸ்ரேயா அகர்வால் ஆகிய மூவரும் 10 மீட்டர் ஏர் ரைபிள் அணி மகளிர் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் இந்தியா தனது கணக்கைத் திறந்துள்ளது. 


தங்கப் பதக்கப் போட்டியில் இந்தியாவிற்கு எதிராக டென்மார்க்கை சேர்ந்த அன்னா நீல்சன், எம்மா கோச் மற்றும் ரிக்கே மேங் இப்சென் ஆகியோரை இந்திய அணி 17-5 என்ற கணக்கில் வீழ்த்தியது. இந்த போட்டியில் போலந்துக்கு வெண்கலம் கிடைத்தது.


கடந்த திங்கட்கிழமை நடந்த இரண்டு சுற்று தகுதிச் சுற்றுக்குப் பிறகு உலகின் முன்னாள் நம்பர் ஒன் இளவேனில், ரமிதா மற்றும் ஸ்ரேயா ஆகியோர் தங்கப் பதக்கத்தை எட்டி இந்திய அணி மீண்டும் தங்கள் திறமையை நிருபித்துள்ளனர். 






இளவேனில், ரமிதா மற்றும் ஸ்ரேயா ஆகியோர் முதலில் 90 ஷாட்களில் 944.4 என்ற கூட்டு முயற்சியில் தகுதி நிலை சுற்று ஒன்றில் முதலிடம் பிடித்தனர். பின்னர் அவர்கள் டென்மார்க்கிற்குப் பின் இரண்டாம் கட்டத்தில் இரண்டாம் இடத்திற்கு தள்ளி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினர். 


ஆடவர் ஏர் ரைபிள் குழு போட்டியில், குரோஷியாவுக்கு எதிரான வெண்கலப் பதக்கப் போட்டியில் இந்திய அணியான ருத்ராங்க்ஷ் பாட்டீல், பார்த் மகிஜா மற்றும் தனுஷ் ஸ்ரீகாந்த் ஆகியோர் 10-16 என்ற கணக்கில் தோல்வியடைந்தனர்.






12 பேர் கொண்ட இந்திய ரைபிள் அணி தற்போது பதக்கப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது, செர்பியா இரண்டு தங்கம் மற்றும் மொத்தம் நான்கு பதக்கங்களுடன் களத்தில் முன்னணியில் உள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண