ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பட்லர் மற்றும் படிக்கல் சிறப்பான துவகத்தை தந்தனர். பட்லரின் அதிரடி சதத்தால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்தது.

  


சேஸிங் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு, ஸ்ரேயாஸ் அணி அதிரடியாக ரன் சேர்த்தார். அதிரடி காட்டி வந்த நிதிஷ் ரானா 18 ரன்களில் சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். வெங்கடேஷ் ஐயர் 6 ரன்கள் எடுத்திருந்த போது சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 51 பந்துகளில் 85 ரன்கள் எடுத்தபோது சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சிவம் மாவி மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதன்காரணமாக யுஸ்வேந்திர சாஹல் ஹாட்ரிக் எடுத்தார். அத்துடன் ஐபிஎல் போட்டிகளில் முதல் முறையாக ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். விறுவிறுப்பாக சென்ற இந்த போட்டியில், 7 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றிருக்கிறது.


வீடியோவைக் காண:






ஹாட்ரிக் வீசிய சாஹல், தரையில் உட்கார்ந்து தனது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார். முன்னதாக, ஐபிஎல் தொடரின்போது பவுண்டரி லைனில் இடைவெளியின்போது தரப்படும் ட்ரிங்ஸ் பெட்டியுடன் சாஹல் உட்கார்ந்திருப்பது போன்ற புகைப்படம் வைரலானது. அந்த புகைப்படத்தில் இருப்பதுபோல ஹாட்ரிக் எடுத்தவுடன் போஸ் கொடுத்து வெற்றியை கொண்டாடினார் சாஹால். இந்த வீடியோ வைரலாகி உள்ளது. 


அதனை அடுத்து, சாஹல் பற்றிய மீம்ஸ்களும் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. சில வைரல் மீம்ஸ்கள் இங்கே.









மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண