இந்திய அணியின் அற்புதமான சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார். கடந்த ஐபிஎல் தொடர்களில் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வந்த சாஹல், ஜனவரி மாதம் நடைபெற்ற ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். 


அதேபோல், யுஸ்வேந்திர சாஹல் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்களை கைப்பற்றி பர்பிள் கேப்பை கைப்பற்றியுள்ளார். இந்திய அணியில் முக்கிய வீரராக ஜொலித்த சாஹல், ஒரு கட்டத்தில் மோசமான பார்ம் காரணமாக ஓரங்கட்டப்பட்டார். 






இந்த சூழலிலும் மனம் தளராத சாஹல் அவ்வபோது ஏதாவது ஒரு சேட்டை செய்து வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வீடியோக்களும் இணையத்தில் படு வைரலாகும். சொல்லபோனால் இவர் இந்திய அணியின் வைகை புயல் என்றாலும் மிகையாகாது. அந்த அளவிற்கு இவரது புகைப்படங்கள் கொண்ட மீம்ஸ் இணையத்தில் பறக்கும். 


இந்தநிலையில், யுஸ்வேந்திர சாஹல் தற்போது மைதானத்தில் நாயுடன் விளையாடிய புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அந்த புகைப்படம்தான் இன்றைய டாப் டாபிக். அந்த புகைப்படத்தின் கீழ் "பப்பி லவ்" என்று குறிப்பிட்டுள்ளார். 






யுஸ்வேந்திர சாஹல் பொதுவாக நாய்களின் தீவிர காதலன். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெரும்பாலும் சாஹல் நாய்களுடன் இருக்கும் புகைப்படங்கள் இடம்பெற்று இருக்கும். அதற்கு உதாரணம் இதோ...






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண