ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழாவின் 15வது சீசனின் முதல் சில போட்டிகள் இறுதி கட்டதை எட்டியுள்ளது. இந்தாண்டு யார் வாகை சூடுவார் என்ற எதிர்ப்பார்ப்புடன் பலர் இறுதிப் போட்டிக்காக காத்திருக்கிறார்கள். சென்னை, மும்பை அணிகள் இந்தாண்டு கோப்பை பெற வாய்ப்பில்லை என்ற ஏமாற்றம் ஒருபுறம் இருக்கிறது.
நடப்பு தொடரில் , தொடர்ந்து தோல்விகளை தழுவிய கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அடுத்த ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் பங்கேற்க மாட்டார் என்று சன்ரைசர்ஸ் அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த முக்கியமான கட்டத்தில் சன்ரைசர்ஸுக்கு கேன் வில்லியம்சன் ஒரு கேப்டனாக கண்டிப்பாக தேவைப்படும் நேரத்தில், வில்லியம்சன் நடப்பு தொடரில் இருந்து விலகி நியூசிலாந்துக்கு செல்கிறார். வில்லியம்சனுக்கு இரண்டாவது குழந்தை பிறக்க இருக்கிறது. இதையடுத்து, குழந்தை பிறக்கும்போது மனைவியுடன் இருக்க வேண்டும் என்பதற்காக கடைசி லீக் போட்டியிலிருந்து விலக இருக்கிறார். பிறக்கப் போகும் மகனை சந்திக்க கேன் வில்லியம்சன் நியூசிலாந்துக்கு செல்கிறார்.
பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய போட்டியில் மும்பை இந்தியன்ஸை நேற்று வீழ்த்தி சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது. கடைசி போட்டியிலும் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் சன்ரைசர்ஸுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பின்புறமாக உள்ளது.
இந்த சீசன் கேன் வில்லியம்சனுக்கு சரியாக அமையவில்லை. 13 போட்டிகளில் 216 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், கேன் வில்லியம்சன் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் என்பதைவிட, அவர் ஒரு ஜெண்டின்மேன் என்பதால், அவருடைய இந்த முடிவுக்கு ரசிகர்கள் வாழ்த்துகளையும், பாராட்டையும் சொல்லி வருகின்றனர்.