Yash Thakur: "அப்பா இறந்தப்ப கூட அழல.. கடவுளுக்குத்தான் வெளிச்சம்" யஷ் தாகூரின் அம்மா சொன்ன சோகக் கதை!

யஷ் தாகூர் குறித்து அவரது தாயார் உணர்ச்சி பொங்க பேசியுள்ளார்.

Continues below advertisement

ஐ.பி.எல் சீசன் 17:

நான் அவனை பாடகராக மாற்ற வேண்டும் என்ற நினைப்பில் பள்ளியில் பாட்டுப்போட்டியில் சேரவைத்தேன் என்று யஷ் தாகூரின் தாயார் கூறினார்.

Continues below advertisement

கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் சீசன் 17 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 20வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. அந்தவகையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 163 ரன்களை எடுத்தது. பின்னர், 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது குஜராத் டைட்டன்ஸ் அணி

வலுவான தொடக்கத்தை கொடுத்த குஜராத் அணி வீரர் சுப்மன் கில்லின் விக்கெட்டை வீழ்த்தினார் யஷ் தாகூர். அந்தவகையில் விஜய் சங்கர், ராகுல் தெவாதியா, ரஷீத் கான் மற்றும் நூர் அகமது ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் நடப்பு சீசனில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் யஷ் தாகூர்.

தந்தையை இழந்த யஷ் தாகூர்:

இந்நிலையில் தன்னுடைய மகன் சிறப்பாக விளையாடியது குறித்து யஷ் தாகூரின் தாயார் உணர்ச்சி பொங்க பேசியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “அவன் குழந்தையாக இருந்தபோது அவனை நான் பாடகராக ஆக்க வேண்டும் என்று கற்பனை செய்தேன். ஆனால் என்னுடைய மகனின் உண்மையான ஆர்வம் கிரிக்கெட்டில்தான் இருந்தது. 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியின்போது சிக்ஸர் அடுத்து இந்திய அணிக்கு வெற்றியை தேடித்தந்ததை பார்த்தது அவனுக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. நான் அவனை பாடகராக மாற்ற வேண்டும் என்ற நினைப்பில் பள்ளியில் பாட்டுப்போட்டியில் சேரவைத்தேன். மறுநாள் பள்ளிக்கு சென்ற போது தயவுசெய்து அவனை அழைத்துச் செல்லுங்கள் அவரால் பாட முடியாது” என்றார்கள்

தோனி அடித்த உலகக் கோப்பை சிக்ஸர்:

அவர் மிகவும் கூச்ச சுபாவம் உள்ளவர் என்று நினைக்கிறேன். அதனால் அவரை அழைத்துச் செல்லுங்கள் என்று பள்ளி ஆசிரியர் சொன்னார். உண்மையிலேயே யஷ் தாக்கூரின் பள்ளி ஆசிரியர் ஒரு சிறந்த பாடகர். கடந்த ஆண்டு அவனுடைய 25 வது பிறந்த நாளின்போது தந்தையை (ரவி சிங் தாக்கூர்) இழந்தான். ஆனால் அப்போது என்னுடைய மகன் ஒரு துளி கண்ணீர் கூட சிந்தவில்லை. அவன் தனது தந்தையின் இறுதிச் சடங்கை முடித்தான். தனி ஒரு ஆளாகவே அனைத்து சூழல்களையும் சமாளித்தான். விதர்பாவின் ரஞ்சி டிராபி அணியின் அவன் இணைந்தபோது நாங்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டோம்.

நாங்கள் அதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. ”யஷ் தன்னைத்தானே ஊக்கப்படுத்திக் கொண்டான். அவன் அதுபோன்ற சூழலை எப்படி சமாளித்தான் என்பது கடவுளுக்கு மட்டுமே வெளிச்சம்என்று உணச்சி பொங்க கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “யஷ் தனது தந்தையுடன் மிகவும் நெருக்கமாக இருந்தான். என் கணவரின் கடைசி நாட்களில் கூட இருவரும் கிரிக்கெட் பற்றித்தான் அதிகம் பேசினார்கள். ஒவ்வொரு போட்டிக்கு பின்னரும் இருவரும் அமர்ந்து அதிகம் உரையாடுவார்கள்என்று பேசியுள்ளார் யஷ் தாகூரின் தாயார்.

Continues below advertisement