ஐ.பி.எல் சீசன் 17:


சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் முதன்முறை டாஸ் வென்றுள்ளது. அதன்படி அந்த அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.


விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் ஐ.பி.எல் சீசன் 17ல் 21 வது லீக் போட்டி இன்று (ஏப்ரல் 8) நடைபெற்று வருகிறது. சென்னை எம்..சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஐ.பி.எல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னுடைய சொந்த மைதானத்தில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றது. ஆனால், வெளியில் சென்று விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்தது சி.எஸ்.கே. அதேநேரம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியோ விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று இன்றைய போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் விளையாட உள்ளது.


சி.எஸ்.கே - கே.கே.ஆர்:


சி.எஸ்.கே இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் இரண்டில் வென்று, புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் நீடிக்கிறது. கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியுற்ற சென்னை அணி, ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க முனைப்பு காட்டுகிறது. அதேநேரம், கொல்கத்தா அணியோ விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியிலும் வென்று முதலிடத்திற்கு முன்னேற தீவிரமாக உள்ளது. எனவே இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.


 


ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 29 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் சென்னை அணி 18 முறையும், கொல்கத்தா அணி 10 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை.   கொல்கத்தா அணிக்கு எதிராக ஒரு போட்டியில் சென்னை அணி அதிகபட்சமாக 225 ரன்களையும், குறைந்தபட்சமாக 114 ரன்களையும் பதிவு செய்துள்ளது. அதேநேரம், சென்னை அணிக்கு எதிராக ஒரு போட்டியில் கொல்கத்தா அணி அதிகபட்சமாக 202 ரன்களையும், குறைந்தபட்சமாக 108 ரன்களையும் பதிவு செய்துள்ளது.


 


டாஸ்  வென்ற சி.எஸ்.கே:


இந்நிலையில் தான் இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ளாது சென்னை சூப்பர் கிங்ஸ். அதன்படி, இந்த சீசனில் முதன் முறையாக டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அதிரடி பேட்டிங்கை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 


கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (பிளேயிங் லெவன்):


பிலிப் சால்ட்(விக்கெட் கீப்பர் ), சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, ஆண்ட்ரே ரஸ்ஸல், ரின்கு சிங், ரமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி



சென்னை சூப்பர் கிங்ஸ் (பிளேயிங் லெவன்):


ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன் ), ரச்சின் ரவீந்திரா, அஜிங்க்யா ரஹானே, டேரில் மிட்செல், சமீர் ரிஸ்வி, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ். தோனி (விக்கெட் கீப்பர் ), ஷர்துல் தாக்கூர், முஸ்தபிசுர் ரஹ்மான், துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா