டபுள்யூபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆர்சிபி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. வதோதராவில் இந்தப்போட்டி நடைபெறுகிறது.

Continues below advertisement

தற்போது நடந்து வரும் 5வது சீசனின் இறுதிப்போட்டியில் டெல்லி - ஆர்சிபி ஆகிய அணிகள் மோதுகின்றன.  ஆர்சிபி அணியை ஸ்மிருதி மந்தனாவும், டெல்லி அணியை ஜெமிமா ரோட்ரிக்சும் வழி நடத்துகின்றனர். இந்தப்போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில், ஆர்சிபி கேப்டன் ஸ்மிருதி மந்தனா டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். 

ஆர்சிபி அணி விவரம்:

ஸ்மிரிதி மந்தனா (கேப்டன்)

Continues below advertisement

கிரேஸ் ஹாரிஸ்

ஜார்ஜியா வோல்

ராதா யாதவ்

ரிச்சா கோஷ் 

நடீன் டி கிளார்க்

பூஜா வஸ்த்ரகர்

அருந்ததி ரெட்டி

ஷ்ரேயங்கா பாட்டீல்

சயாலி சத்கரே

லாரன் பெல்

டெல்லி அணி விவரம்:

ஜெமிமா ரோட்ரிக்ஸ் (கேப்டன்)    

லிசெல் லீ  

ஷஃபாலி வர்மா

லாரா வோல்வார்ட்

மரிசான் கேப்

சினெல்லே ஹென்றி

நிகி பிரசாத்

சினே ராணா

மின்னு மணி

ஸ்ரீ சரணி

நந்தினி சர்மா

4வது முறை பைனலில் டெல்லி

இதுவரை நடந்து முடிந்த 4 சீசன்களில் 3 முறை இறுதிப்போட்டிக்குச் சென்ற பெருமை டெல்லி அணிக்கு உள்ளது. தற்போது அவர்கள் 4வது முறையாக இறுதிப்போட்டிக்குச் சென்றுள்ளனர். ஆர்சிபி அணி இதற்கு முன்பு கடந்த 2024ம் ஆண்டு நடந்த இறுதிப்போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தியே கோப்பையை கைப்பற்றியது.

பரிசுத்தொகை எவ்வளவு?

சாம்பியன் பட்டம் வெல்லும் அணி - ரூபாய் 6 கோடி பரிசு

2வது இடம்பிடிக்கும் அணி - ரூபாய் 3 கோடி பரிசு

தொடர் நாயகி - ரூபாய் 5 லட்சம்

ஆரஞ்ச் தொப்பி வின்னர் ( அதிக ரன்கள்) - ரூபாய் 5 லட்சம்

பர்ப்ள் தொப்பி வின்னர் ( அதிக விக்கெட்டுகள்) - ரூபாய் 5 லட்சம்

அதிக சிக்ஸர்கள் அடித்த வீராங்கனை - ரூபாய் 5 லட்சம்

சிறந்த ஸ்ட்ரைக் ரேட் கொண்ட வீராங்கனை - ரூபாய் 5 லட்சம்

இறுதிப்போட்டியில் ஆட்டநாயகி - ரூபாய் 2.5 லட்சம்