மகளிர் ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற 169 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது குஜராத் ஜெயண்ட்ஸ் அணி.
ஆரம்பமே அதிர்ச்சி:
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் டெல்லி அணியின் கேப்டன் ஜெமிமா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன் படி தொடக்க ஆட்டக்காரர்களாக சோஃபி டிவைன் மற்றும் பெத் மூனி களமிறங்கினார், டெல்லி அணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால் ஆரம்பம் முதலே குஜராத் அணி தடுமாறியது, ஹென்ரி பந்துவீச்சில் டிவைன் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். பவர்பிளேயில் முதல் நான்கு ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அனுஷ்கா சர்மா மற்றும் மூனி அதிரடியில் இறங்கினர்.
ஒரே ஒவரில் இரண்டு விக்கெட்டுகள்:
பவர்பிளேவின் இறுதிஓவரில் டெல்லி வீரங்கணை நந்தினி அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை எடுத்து குஜராத் அணிக்கு அதிர்ச்சி அளித்தார். இதில் முக்கியமாக ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனான கார்ட்னர் டக் அவுட்டாகி வெளியேறினார். இதனால் டெல்லி அணி 38 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பொறுப்புடன் ஆடிய பெத் மூனி:
அடுத்து களமிறங்கிய கனிகாவும் 6 ரன்னுக்கு ஆட்டமிழந்த நிலையில் பெத் மூனி அணியை சரிவிலிருந்து மீட்க போராடினார்.அவருக்கு பக்கபலமாக் வார்ஹம் சிங்கிள் மட்டுமே ஆடி பார்ட்னர்சிப் அமைத்தனர். இதனால் ஸ்கோர் 10 ஓவர்கள் முடிவில் 67 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது.
டெல்லிக்கு 169 ரன்கள் இலக்கு:
இருவரும் செட் ஆன பின்னர் ஓவருக்கு ஒரு பவுண்டரி வீதம் ஸ்கோரானது சீராக முன்னேறியது, வார்ஹம் அதிரடியாக ஆடிய 35 ரன்னுக்கு தனது விக்கெட்டை இழந்தார். ஆனால் மறுமுனையில் மூனி தேவையான ரன்களை அடித்தார். இதற்கிடையில் பாரதி ஃபுல்மல்லி டக் அவுட்டாக குஜராத் அணி 150 ரன்களை கடக்குமா என கேள்வி எழுந்தது.
ஆனால் காஸ்வி கவுதம் இறுதிக்கட்டத்தில் அதிரடியாக ஆட குஜராத் அணி 7 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் குவித்தது. அரைசதத்தை கடந்த மூனி 62 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். டெல்லி தரப்பில் ஹென்ரி 3 விக்கெட்டு நந்தினி 2 விக்கெட்டையும் எடுத்தனர்
