ஆடவர் ஐபிஎல் தொடராக இருந்தாலும் சரி மகளிர் ஐபிஎல் தொடராக இருந்தாலும் வேறு எந்த நாட்டு தொடராக இருந்தாலும் கேபிடல்ஸ் அணிக்கு இறுதிப்போட்டிக்கு ஆகவே ஆகாது, இதுவரை 10 இறுதிப்போட்டிகளில் விளையாடி 2 முறை மட்டுமே இறுதிப்போட்டியில் வென்று உள்ளது.டெல்லி கேபிடல்ஸ் அணியின் இந்த வினோதமான 'இறுதிப்போட்டி ராசி பற்றி காணலாம்.
இறுதிப்போட்டியில் தடுமாறும் 'கேபிடல்ஸ்
ஐபிஎல் (IPL) தொடங்கி தென்னாப்பிரிக்காவின் SA20, ஐக்கிய அரபு அமீரகத்தின் ILT20 என பல ஃப்ரான்சைஸ் கிரிக்கெட்டில் மிகப்பெரிய பிராண்ட் கேபிடல்ஸ். ஆனால், இந்த அணிக்கு ஒரு மிகப்பெரிய பலவீனம் இருக்கிறது. அதுதான் 'இறுதிப்போட்டி பயம்' (Finals Jinx). ஆடவர் ஐபிஎல், மகளிர் ஐபிஎல் அல்லது வெளிநாட்டுத் தொடர்கள் என எதில் விளையாடினாலும், இறுதிப்போட்டி என்று வந்துவிட்டால் கேபிடல்ஸ் அணிக்கு அந்த வெற்றி என்பது எட்டக்கனியாக மாறிவிடுகிறது
வரலாறு என்ன சொல்கிறது?
இதுவரை பல்வேறு லீக் தொடர்களில் கேபிடல்ஸ் குழுமத்தின் அணிகள் (Delhi Capitals, Delhi Capitals Women, Pretoria Capitals, Dubai Capitals) மொத்தம் 10 முறை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. ஆனால், அதில் வெறும் 2 முறை மட்டுமே கோப்பையை வென்றுள்ளன. 8 முறை இறுதிப்போட்டியில் தோல்வியடைந்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளன.
| தொடர் | அணி | இறுதிப்போட்டி (ஆண்டு) | முடிவு |
| IPL (ஆடவர்) | டெல்லி கேபிடல்ஸ் | 2020 | தோல்வி (Vs MI) |
| WPL (மகளிர்) | டெல்லி கேபிடல்ஸ் | 2023 | தோல்வி (Vs MI) |
| WPL (மகளிர்) | டெல்லி கேபிடல்ஸ் | 2024 | தோல்வி (Vs RCB) |
| WPL (மகளிர்) | டெல்லி கேபிடல்ஸ் | 2025 | தோல்வி (Vs MI) |
| WPL (மகளிர்) | டெல்லி கேபிடல்ஸ் | 2026* | தோல்வி (Vs RCB) |
| SA20 | பிரிட்டோரியா கேபிடல்ஸ் | 2023 | தோல்வி (Vs SEC) |
| SA20 | பிரிட்டோரியா கேபிடல்ஸ் | 2026 | தோல்வி (Vs SEC) |
| ILT20 | துபாய் கேபிடல்ஸ் | 2024 | தோல்வி (Vs MI Emirates) |
| ILT20 | துபாய் கேபிடல்ஸ் | 2025 | வெற்றி |
| Legends League | இந்தியா கேபிடல்ஸ் | 2022 | வெற்றி |
ஏன் இந்தத் தடுமாற்றம்?
லீக் சுற்றுகளில் முதலிடம் பிடிப்பதும், புள்ளிப்பட்டியலில் ஆதிக்கம் செலுத்துவதும் டெல்லி அணிக்கு கைவந்த கலையாகும். குறிப்பாக மகளிர் ஐபிஎல் தொடரில் மெக் லானிங் தலைமையில் தொடர்ந்து மூன்று சீசன்களாக புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர். ஆனாலும், இறுதிப்போட்டியில் ஒருவித பதற்றத்தால் விக்கெட்டுகளை வரிசையாக இழப்பது அல்லது பந்துவீச்சில் சொதப்புவது என அந்த கடைசி படியைத் தாண்ட முடியாமல் கோட்டைவிடுகின்றனர்விதிவிலக்காக அமைந்த வெற்றிகள்
ஆறுதல் தந்த கோப்பைகள்
கேபிடல்ஸ் குழுமத்திற்கு மிகப்பெரிய நிம்மதியாக அமைந்தது 2025-ம் ஆண்டு துபாய் கேபிடல்ஸ் வென்ற ILT20 கோப்பையைதான். அதேபோல் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் இந்தியா கேபிடல்ஸ் அணி ஒருமுறை கோப்பை வென்றுள்ளது. இவை தவிர்த்து முதன்மைத் தொடர்களான ஐபிஎல் மற்றும் மகளிர் ஐபிஎல் ஆகியவற்றில் இன்னும் கோப்பை என்பது கனவாகவே உள்ளது.
Chokers பட்டத்தை மாற்றுமா?
சரியான நேரத்தில் சொதப்புவது) என்பது தென்னாப்பிரிக்க அணிக்கு மட்டுமே உரித்தானது என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால், இப்போது கேபிடல்ஸ் அணியின் இந்த 10-ல் 2 என்ற வெற்றி விகிதம், அந்தப் பட்டத்தை இவர்கள் பக்கம் திருப்புமோ என்ற அச்சத்தை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
இந்த 'இறுதிப்போட்டி சாபத்தை' உடைத்து, இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ஜெமிமா தலைமையிலான டெல்லி அணி ஆர்சிபி அணியை வீழ்த்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
