ஐபிஎல் தொடர் நடப்பாண்டு மார்ச் 31 ஆம் முதல் முதல் தொடங்க உள்ளது. இந்த ஆண்டு, போட்டி ஹோம் மற்றும் அவே வடிவத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மொத்தம் 74 போட்டிகள் நடைபெறவுள்ளது.  மேலும் போட்டிகள் இந்தியாவில் 12 வெவ்வேறு மைதானங்களில் நடத்த திட்டப்பட்டுள்ளது. 

 

ஐந்து முறை கோப்பையை வென்ற மும்பை அணிக்கு கடந்த ஆண்டு மிகவும் மோசமான ஆண்டாக அமைந்தது.
  14 போட்டிகளில் நான்கில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது, ஆனால் இந்த முறை, மும்பை அணி ஆறாவது கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் இருக்கிறது. ஆனால் அது மும்பை அணிக்கு எளிதான வேலையாக இருக்காது. மும்பை அணியின் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜே ரிச்சர்ட்சன் முழு போட்டியிலிருந்தும் விலகியுள்ளனர். இது மும்பை அணிக்கு சற்று சவாலானதாக இருந்தது.

 

2021ஆம் ஆண்டு முதல்  மும்பை அணியில் உள்ள சச்சின் தெண்டுல்கரின் மகனும் ஆல்-ரவுண்டருமான அர்ஜுன் தெண்டுல்கர் இந்த முறை அணியில் இடம்பெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அதுவும் பும்ராவுக்கு பதிலாக அவர் அணியில் சேர்க்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. 

 

உத்தேசிக்கப்பட்ட மும்பை அணியின் ஆடும் லெவன்


 


இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்): கடந்த ஆண்டு மெகா ஏலத்தில் ரூ. 15.25 கோடிக்கு இஷான் கிஷானை அணிக்குள் மீண்டும் கொண்டுவந்துள்ளது மும்பை அணி நிர்வாகம்.  மேலும் கடந்த ஆண்டு அணியில் அதிக ரன் எடுத்த வீரராக இருந்த இவர், இந்த ஆண்டு இன்னும் அதிக ரன்களை எடுப்பார் என குறிப்பிடத்தக்கது. 

 

ரோஹித் சர்மா(கேப்டன்): கேப்டன் ரோஹித் சர்மா மும்பை அணியின் மிகப்பெரிய பலம். அவர் மும்பையின் கேப்டனாக ஐந்து கோப்பைகளை வென்றுள்ளார் மற்றும் கடந்த இரண்டு மாதங்களில் மீண்டும் தனது பார்முக்கு வந்துள்ளார். 

 

ப்ராவிஸ்: தென்னாப்பிரிக்க இளைஞரான டெவால்ட் ப்ராவிஸ் கடந்த ஆண்டு தனது முதல் ஐபிஎல் சீசனில் விளையாடினார். சிறப்பாக விளையாடிய அவர் அணிக்கு பெரும் பலமாக இருப்பார் என நம்பபடுகிறது.  அதேபோல் 2023 இல், நடைபெற்ற டி20 லீக்குகளிலும் விளையாடிய அனுபவத்துடன், ப்ராவிஸ் மும்பைக்கு ஒரு பெரிய இன்னிங்ஸை இவர் ஏற்படுத்தி தருவார் என எதிர்பார்க்கலாம். 

 

திலக் வர்மா: கடந்த ஆண்டு ஐபிஎல்லில் திலக் வர்மா தனது பேட்டிங்கால் அனைவராலும் பாராட்டப்பட்டார்., மேலும் 2023 ஆம் ஆண்டில், தொடர்ந்து சிறப்பாக விளையாடுவார் என அனைவரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

 

சூர்யகுமார் யாதவ்: சூர்யகுமார் யாதவ் உலகின் நம்பர் 1 T20 பேட்ஸ்மேனாக உள்ளார் மற்றும் மைதானத்தினை அனைத்து இடங்களை சுற்றியும்  ரன் குவிக்கும் திறன் கொண்டவர். ஆனால் சமீபத்திய பார்ம் அவுட் இவர் மீது கேள்விகளை எழுப்பியுள்ளது. 

 

கேமரூன் கிரீன்: கடந்த ஆண்டு நடந்த மினி ஏலத்தில், கேமரூன் கிரீனை மும்பை அணி நிறுவனம் ரூ.17.50 கோடிக்கு வாங்கியது. 23 வயதான ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் சர்வதேச அரங்கில் சிறப்பாக விளையாடியதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு தனது ஐபிஎல்லில் அறிமுகமாகிறார்.  

 

ஜோஃப்ரா ஆர்ச்சர்: ஜஸ்பிரித் பும்ரா இல்லாத நிலையில், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் மும்பைக்கான பந்து வீச்சுக்கு பெரும் பலமாக இருக்க வேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்பட்டுள்ளார் எனலாம்.  

 

அர்ஜுன் தெண்டுல்கர்: புகழ்பெற்ற சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் தெண்டுல்கர், 2021 பதிப்பிலிருந்து மும்பை அணியுடன் இருக்கிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற உள்நாட்டு கிரிக்கெட்டில் தனது ஆல்ரவுண்ட் ஆட்டத்தால் ஈர்க்கப்பட்டார்; ஐபிஎல் 2023ல், பும்ராவின் வெற்றிடத்தை அவரால் நிரப்ப முடியும் என அணி நிர்வாகம் நம்புகிறது. 

 

ஷம்ஸ் முலானி: மும்பைக்காக விளையாடும் போது உள்நாட்டு கிரிக்கெட்டில் தனக்கென ஒரு பெரிய பெயரை ஷம்ஸ் முலானி உருவாக்கியுள்ளார், மேலும் இந்த ஆண்டும் சிறப்பாக விளையாட தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். 

 

குமார் கார்த்திகேயா: மத்திய பிரதேசத்தினைச் சேர்ந்த  குமார் கார்த்திகேயா கடந்த ஆண்டு மும்பைக்காக நான்கு போட்டிகளில் விளையாடினார், அதில் அவர் தனது பந்துவீச்சினால் ஈர்க்கப்பட்டார். இந்த ஆண்டு, அவர் இந்த ஆண்டு சுழல் பந்துக்கு வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

ஜேசன் பெஹ்ரென்டார்ஃப்: கடந்த ஆண்டு ஐபிஎல் 2023 மினி ஏலத்திற்கு முன்னதாக ஆர்சிபியில் இருந்து ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் பெஹ்ரென்டார்ஃப்பை மும்பை வாங்கியது.  மேலும் தரமான இந்திய வேகப்பந்து வீச்சாளர் மும்பை அணிக்கு இல்லாத நிலையில், அவர் ஆர்ச்சருடன் இணைந்து மும்பை அணிக்கு நம்பிக்கை அளிக்கும் ஆட்டத்தினை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.