UPW-W vs GG-W, 1 Innings Highlight: மகளிர் ஐ.பி.எல்: அதிரடி காட்டிய ஹேமலதா, ஆஷ்லி ஜோடி...உ.பி. அணிக்கு 179 ரன்கள் இலக்கு..!

WPL 2023, UPW-W vs GG-W: இந்த தொடரில் இறுதி சுற்றுக்கு யார் போவார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ள நிலையில், இந்த போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

Continues below advertisement

மகளிர் ஐ.பி.எல். கிரிக்கெட் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள குஜராத் மூன்றாவது இடத்தில் உள்ள உத்தர பிரதேச அணியை இன்று நடைபெற்ற போட்டியில் எதிர்கொண்டது. இந்த தொடரில் இறுதி சுற்றுக்கு யார் போவார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ள நிலையில், இந்த போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

Continues below advertisement

இன்றைய போட்டி:

6 போட்டிகளில் 3 வெற்றி, 3 தோல்வி என 6 புள்ளிகளை பெற்றுள்ளது உத்தர பிரதேச  அணி. குஜராத் அணியை பொறுத்தவரையில், 7 போட்டிகளில் 2 வெற்றி, 5 தோல்விகள் என நான்கு புள்ளிகளை பெற்றுள்ளது குஜராத் அணி.

குஜராத் அணியில் ஹர்லீன் தியோல், ஆஷ்லி கார்ட்னெர், சோபியா டங்லி, அனபெல் சதர்லேண்ட், சினே ராணா, ஹேமலதா என சிறந்த வீராங்கனைகள் இருப்பதால் இந்த போட்டியில் அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதி சுற்றுக்கு போக முயற்சி செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

அலிசா ஹீலி, தேவிகா வைத்யா, கிரண் நவ்கிரே, தஹ்லியா மெக்ராத், தீப்தி சர்மா, சிம்ரன் ஷேக், சோஃபி எக்லெஸ்டோன் ஆகிய வீரர்கள் உத்தர பிரதேச அணியில் இடம்பெற்றதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என கருதப்பட்டது. அதற்கு ஏற்றார் போல, மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியின் முதல் பாதி சிறப்பாகவே அமைந்தது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய சோபியா டங்லி, லாரா வோல்வார்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தாலும் சொற்ப ரன்களுக்கு இருவரும் வெளியேறினர்.

பொளந்து கட்டிய ஹேமலதா, ஆஷ்லி ஜோடி:

இதையடுத்து, களம் இறங்கிய ஹர்லீன் தியோல் 4 ரன்களுக்கு அவுட்டாகி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்த நிலையில், அடுத்து களமிறங்கிய ஹேமலதா, ஆஷ்லி கார்ட்னெர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஹேமலதா, 33 பந்துகளில் 57 ரன்களையும் ஆஷ்லி கார்ட்னெர், 39 பந்துகளில் 60 ரன்களையும் எடுத்து ஆட்டம் இழந்தனர். இறுதியாக, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்களை குஜராத் அணி எடுத்தது. 

மற்ற அணிகளின் விவரம்:

6 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி 5 போட்டிகளிலும் வெற்றிபெற்று 10 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள டெல்லி அணி, 6 போட்டிகளில் 4 வெற்றிகள், 2 தோல்வில் பெற்றுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பெங்களூரு அணி, 2 வெற்றி 5 தோல்வியுடன் என 4 புள்ளிகளை பெற்று 4ஆவது இடத்தில் உள்ளது.

இதையும் படிக்க: IPL 2023: காயத்தில் இருந்து மீளாத வீரர்கள்.. முக்கிய பிளேயர்கள் மிஸ்.. இந்தாண்டு ஐபிஎல்-லில் யார் யார் இல்லை..?

Continues below advertisement