Vipraj Nigam: டெல்லியை கரை சேர்த்த விப்ராஜ்.. முதல் ஐ.பி.எலில் சம்பவம்.. யார் இவர்?
Vipraj Nigam Profile: "விப்ராஜ் நிகாம், தனது முதல் ஐபிஎல் போட்டியில், முக்கிய விக்கெட்டை கைப்பற்றி மற்றும் அதிரடியாக விளையாடி அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளார் "

ஐ.பி.எல். கிரிக்கெட்
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 18வது சீசன் மார்ச், 22-ம் தேதி தொடங்கியது. இந்தத் தொடரின் 4-வது லீக் போட்டி, ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது. அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியை ரிஷப் பண்ட், தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச முடிவு செய்தது.
அதிரடி காட்டிய லக்னோ அணி
லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான எய்டன் மார்க்ரம், மிட்சல் மார்ஷ் இருவரும் விளையாட்டை தொடங்கினர். எய்டன் மார்க்ரம் 15 ரன்னில் மிட்செல் ஸ்டார்க் பந்தில் அவுட் ஆனார். அதற்கு அடுத்து வந்த நிக்கோலஸ் பூரன், மார்ஷ் கூட்டணி அதிரடியாக விளையாடி அணியின் ரன்னை உயர்த்தியது. இருவரும் அரை சதம் கடந்தனர்.
மிட்சல் மார்ஷ் 36 பந்தில் 72 ரன் எடுத்தார். 6 பவுண்ட்ரிகள், 6 சிக்ஸர் அடித்து முகேஷ் குமார் பந்தில் அவுட் ஆனார். நிக்கோலஸ் பூரன் 30 பந்தில் 7 சிக்ஸர், 6 பவுண்ட்ரியுடன் 75 ரன்னில் ஆட்டமிழந்தார். மிட்செல் ஸ்டார்க் பூரனை போல்ட் செய்தார். லக்னோ கேப்டன் ரிஷ்ப் பந்த ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது லக்னோ.
டெல்லி அணிக்கு ஏமாற்றம்
இந்தப் போட்டியில் வெற்றி பெற டெல்லிக்கு 210 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய டெல்லி அணி முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
அதனைத் தொடர்ந்து சீரான இடைவெளியில் டெல்லி அணி தனது விக்கெட்டுகளை இழந்து வந்தது. டுப்ளசிஸ் 29 ரன்கள், அக்சர் பட்டேல் 22, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 34 ரன்கள் அடித்திருந்தனர். முன் வரிசையில் இறங்கியவர்கள் டெல்லிக்கு ஏமாற்றத்தை தந்தனர்.
களத்திற்கு வந்த விப்ராஜ் நிகாம்
தொடர்ந்து விக்கெட்டுகளை விழுந்து டெல்லி அணி தத்தளித்து கொண்டிருந்தபோது, விப்ராஜ் நிகாம் நன்றாக விளையாடிக் கொண்டிருந்த அசுதோஷ் சர்மாவுடன் கைகோர்த்தார். 15 பந்துகளை சந்தித்த விப்ராஜ், இரண்டு சிக்ஸர்கள் மற்றும் ஐந்து போர்களை அடித்து 39 ரன்களை சேர்த்தார். டெல்லி அணி தோற்கும் நிலையில் இருந்த போது, 260 ஸ்டைக் ரேட்டில் விப்ராஜ் ஆடிய ஆட்டம், ஆட்டத்தை தலைகீழாக மாற்றியது. முன்னதாக தான் வீசிய முதல் ஓவரிலேயே, சவுத் ஆப்பிரிக்காவை சேர்ந்த மார்க்ராம் விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார்.
யார் இந்த விப்ராஜ் ? Who Is Vipraj Nigam
UPT20 போட்டியில் விபராஜ் அதிரடியாக விளையாடி 2023 ஆம் ஆண்டு பலரது கவனத்தை பெற்றார். ஒரே ஓவரில் 28 ரன்கள் எடுத்து 2023 ஆம் ஆண்டு பலரின் கவனத்தை பெற்றார். தொடர்ந்து அதே ஆண்டு எட்டாவது ஆளாக களமிறங்கி, 29 பந்துகளில் 48 ரன்கள் பெற்றிருந்தார். டெல்லி கேப்பிடல்ஸ் அணி அவரை ஐபிஎல் ஏலத்தில் 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கி இருந்தது.
அவரது அடிப்படை விலையான, 20 லட்சத்தில் இருந்து, மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் போட்டி போட்டு அவரை வாங்க முயற்சி செய்தது. இறுதியில் டெல்லி கேப்பிட்டல் சனி 50 லட்ச ரூபாய் கொடுத்து அவரை வாங்கியது. விப்ராஜ் நிகாம் நடந்து முடிந்த, சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் எட்டாம் வரிசையில் இறங்கி 8 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து வியக்க வைத்துள்ளார்.
3 ஃபோர் மற்றும் 2 சிக்ஸ் அடித்தார், ஸ்ட்ரைக் ரேட் 337 ஆக இருந்தது. உத்தர பிரதேச அணி தோல்வியை நோக்கி சென்று கொண்டு இருந்த நிலையில், விப்ராஜ் நிகாம் தனது அதிரடி மூலம் போட்டியின் முடிவை மாற்றினார். இன்றைய போட்டியிலும் அதே போன்று ஒரு அதிரடி ஆட்டத்தை ஆடி, டெல்லி கேப்பிடல் அணியை தோல்வியிலிருந்து மீட்டெடுத்துள்ளார்.