DC Vs LSG: கடைசிவரை திக்...திக்: லக்னோவை பொளந்து கட்டிய டெல்லி..எதிர்பாக்கலைல!

DC Vs LSG: இன்று டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் லக்னோ சூப்பார் கிங்க்ஸ் இடையிலான போட்டியில் அசுதோஷ் சர்மாவின் அதிரடியான பேட்டிங்கால் வெற்றியை பறித்துள்ளது டெல்லி.

Continues below advertisement

அசுதோஷ் சர்மா மற்றும் விப்ராஜ் நிகாமின் அதிரடியான பேட்டிங்கால், தோல்வியின் விளிம்பில் சென்ற டெல்லி அணியை , வெற்றி பக்கம் இழுத்து சென்றுவிட்டனர். கடைசிவரை போராடி, 1 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது டெல்லி கேபிட்டல்ஸ் அணி. இதனால் கடைசிவரை ஆட்டமானது விறுவிறுப்புக்கு பஞ்சம்மில்லாமல் இருந்தது என்றே சொல்லலாம்.

Continues below advertisement

ஐபிஎல் 4வது ஆட்டம்:

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 18-வது சீசன் மார்ச் 22-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் 4-வது லீக் போட்டியான, டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இடையே ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினத்தில் உள்ள மைதானத்தில் இன்று நடைபெற்றது.

அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி டாஸ் வென்ற நிலையில், பந்துவீச முடிவு செய்ததையடுத்து, ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை முதலில் பேட் செய்தது.

இந்த போட்டியில் குறிப்பிடத்தக்க வகையில், டெல்லி அணியைச் சேர்ந்த நட்சத்திர வீரர்களான தமிழ்நாட்டைச் சேர்தவரான நடராஜன் மற்றும் கே.எல். ராகுல் இடம்பெறவில்லை. 

Also Read: IPL 2025 DC vs LSG: கே. எல். ராகுல் ஏன் விளையாடல தெரியுமா? இதான் காரணம்! வாழ்த்து சொல்லுங்க!

Also Read: T Natarajan: நடராஜனை பெஞ்சில் உட்கார வைத்த டெல்லி.. நடராஜனுக்கு என்னாச்சு ?

லக்னோ பேட்டிங்: 

லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள், அதிரடியாக ஆடி ஸ்கோரை டாப்பில் ஏத்திவிட்டனர்.  குறிப்பாக, மிட்சல் மார்ஷ் டெல்லி பவுலர்களை  மிரட்டியே விட்டார். எய்டன் மார்க்ரம் 15 ரன்னில் மிட்செல் ஸ்டார்க் பந்தில் அவுட் ஆனார். அதற்கு அடுத்து வந்த, நிக்கோலஸ் பூரன் மற்றும் மார்ஷ் கூட்டணி அதிரடியாக விளையாடி அணியின் கோரை உயர்த்தி விட்டனர். 

மிட்சல் மார்ஷ் 36 பந்தில் 72 ரன் எடுத்தார்; 6 பவுண்ட்ரிகள், 6 சிக்ஸர் அடித்து முகேஷ் குமார் பந்தில் அவுட் ஆனார். நிக்கோலஸ் பூரன் 30 பந்தில் 7 சிக்ஸர், 6 பவுண்ட்ரியுடன் 75 ரன்னில் ஆட்டமிழந்தார். அதற்கடுத்து மில்லர் 19 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து 20 ஓவர்கள் முடிவுற்ற நிலையில் 8 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி. அதிகபட்சமாக ஸ்டார்க் 3 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

டெல்லி பேட்டிங்:

இதையடுத்து, கடினமாக போராட வேண்டிய சூழலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிட்டல்ஸ் அணி, ஆரம்பமே தடுமாற்றமானது. தொடக்க ஆட்டக்காரரான ஜேக் ஃப்ராசர் 2 பந்துகளில் ஒரு ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதற்கடுத்து டூப்ளிசிஸ் சிறப்பாக ஆடிய நிலையில், 18 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

இதற்கடுத்து களமிறங்கிய அக்சர் பட்டேல் 11 பந்துகளில் 22 ரன்களும், டிரிஸ்டன் 22 பந்துகளில் 34 ரன்களும், நிகாம் 15 பந்துகளில் 39 ரன்களும் எடுத்தனர். 

ஆரம்பத்தில் சற்று டெல்லி சொதப்பினாலும் , ஆட்டத்தின் நடுவில் லக்னோ பந்துவீச்சை பந்தாடி வெற்றிக் கோட்டை நெருங்கியது டெல்லி. இறுதிவரை நின்ற அசுதோஷ் சர்மா, 8 விக்கெட் இழந்த போதிலும் அதிரடியாக ஆடி 31 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து, டெல்லிக்கு வெற்றியை பெற்று கொடுத்து விட்டார். இந்நிலையில், 19.3 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு , 211 ரன்கள் எடுத்து டெல்லி அணி வெற்றியை பெற்றது .

Continues below advertisement