Watch Video: ‘இது குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி’ - வைரலாகும் சி.எஸ்.கே தாத்தாவின் வீடியோ
வீட்டில் போட்டியை பார்த்து கொண்டிருக்கும் முதியவர் ஒருவர் தோனி பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்யும்போது கொண்டாடி மகிழ்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

2022 ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நேற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. ஐ.பி.எல். தொடரில் சென்னை-மும்பை அணிகள் மோதும் ஆட்டம் என்றால் எப்போதும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இந்நிலையில், இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஃபீல்டிங் தேர்வு செய்தது. பேட்டிங் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. இலக்கை சேஸ் செய்த சென்னை அணிக்கு கடைசி நான்கு பந்துகளில் 17 ரன்கள் தேவை என்றபோது நிதானமாக ஆடிய தோனி, ஒரு சிக்சர், பவுண்டரி, 2 ரன்கள் மற்றும் மீண்டும் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இதனால், “Dhoni Finishes off in style" என ரசிகர்கள் கொண்டாடினர். போட்டி முடிந்து வெற்றியுடன் பெவிலியன் திரும்பும்போது தோனியைப் பார்த்து ஜடேஜா ’Take a Bow' முறையில் உடலை வளைத்து மரியாதை செலுத்தினார். ரசிகர்கள் மட்டுமின்றி, கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் என அனைவரும் தோனியின் வெற்றியை கொண்டாடி தீர்த்தனர்.
அந்த வரிசையில், சிஎஸ்கே ரசிகர் ஒருவர் வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அதில், வீட்டில் போட்டியை பார்த்து கொண்டிருக்கும் முதியவர் ஒருவர் தோனி பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்யும்போது கொண்டாடி மகிழ்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
வீடியோவைக் காண:
இந்த வீடியோவுக்கு கமெண்ட் செய்து வரும் நெட்டிசன்கள், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி ‘குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி’ என பதிவிட்டு வருகின்றனர். மேலும், கேஜிஎஃப், பீஸ்ட் மோட் பாடல்களுக்கு தோனியின் ஃபினிஷிங் ஆட்டத்தை மேட்ச் செய்து வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. சமூக வலைதளம் முழுவதும் ஒரே தோனி மயமாக இருக்கிறது!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்