Virat Kohli : ”அவருக்கு சப்போர்ட் பண்ணுங்க” முதல் ஆளாய் வாழ்த்து தெரிவித்த கிங் கோலி
Virat Kohli : ஆர்சிபி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ரஜத் படிதருக்கு கோஹ்லி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனாக ரஜத் படிதார் நியமிக்கப்பட்டதற்கு விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதிய கேப்டன்:
ஆர்சிபி அணியின் புதிய கேப்டனாக ரஜத் படிதார் நியமிக்கபட்டுள்ளார்.ஆர்சிபி அணியை வழிநடத்தும் எட்டாவது வீரர் மற்றும் நான்காவது இந்தியர் என்ற பெருமையை பட்டிதர் பெற்றார். அவருக்கு முன்பு, ராகுல் டிராவிட், டேனியல் வெட்டோரி, ஷேன் வாட்சன், விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ், ஷேன் வாட்சன் மற்றும் அனில் கும்ப்ளே போன்ற ஏழு வீரர்கள் ஆர்சிபி அணிக்கு தலைமை தாங்கியுள்ளனர்.
இதையும் படிங்க; RCB Captain 2025: கப்பு வருமா? ஆர்சிபியின் புதிய கேப்டன் இவர் தான்!
விராட் கோலி:
ஆர்சிபி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ரஜத் படிதருக்கு கோஹ்லி வாழ்த்து தெரிவித்தார். "உங்களுக்கு நல்வாழ்த்துக்கள். நீங்கள் வளர்ந்த விதம், இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்துள்ளீர்கள். இது மிகவும் தகுதியானது. நானும் அணியை சேர்ந்த மற்ற வீரர்களும் உங்கள் பின்னால் இருப்போம். இது ஒரு பெரிய பொறுப்பு. . நீங்கள் வலிமை பெறுவீர்கள் என்று நான் நம்புகிறேன்" என்று கோஹ்லி கூறினார்.
"அவர் விளையாட்டில் புதிய பரிமாணத்தை அடைந்துள்ளார். அவரது ஆட்டம் பல நிலைகளில் முன்னேறியுள்ளது. அவர் மாநில அணியை வழிநடத்தியுள்ளார். அணியை வழிநடத்த என்ன தேவை என்பதை அவர் காட்டியுள்ளார். ரசிகர்கள் தங்கள் ஆதரவைக் காட்டவும், அணிக்கு சிறந்ததைச் செய்வார் என்பதை அறிந்து கொள்ளவும் நான் கேட்டுக்கொள்கிறேன். என்ன நடந்தாலும், மிக முக்கியமானது அணி வீரர்கள் மற்றும் அணியுதான். அவருக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், அனைவருடனும் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்," என்றார் கோலி.
ஏன் படிதார்?
தலைமை பயிற்சியாளர் ஆண்டி ஃப்ளவர், ரஜத் படிதார் கேப்டனாக ஏன் நியமிக்கப்பட்டார் என்பது குறித்து மூன்று முக்கிய விஷயங்களை பகிர்ந்தார். "மூன்று முக்கிய விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். முதலாவதாக, ஐபிஎல்லில் தேவைப்படும் அமைதியும் பொறுமையும் உள்ளது. அது அவருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இரண்டாவது விஷயம், அவர் அமைதியாக இருக்கிறார், ஆனால் அவர் தன்னைச் சுற்றியுள்ள வீரர்களை பற்றி அக்கறை காட்டுகிறார்.
அதாவது, அவர் உடனடியாக மற்றவர்களின் மரியாதையையும் அக்கறையையும் பெறுவார், மேலும் ஒரு தலைவராக, அணி வீரர்கள் மற்றும் ரசிகர்கள் அவரைப் பின்தொடர்வார்கள். மூன்றாவது, அவர் மீது ஒரு பிடிவாதமும் திடமான மனப்பான்மையும் அவரிடம் உள்ளது. அவர் விளையாடும் விதத்திலும், விளையாட்டை ஏற்றுக்கொள்ளும் விதத்திலும் நீங்கள் அதைக் காணலாம்," என்று ஆண்டி ஃப்ளவர் கூறினார்.